• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெருமை : “இரண்டாம் உலகப் போரின் உளவாளி”..

2020_sep_v23
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு லண்டனில் நினைத்தகடு!

லண்டனின் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று புளூ பிளேக் எனப்படும் நீலத்தகடுகள் திட்டம் மூலமாக முக்கியமான கட்டடங்களை சிறப்பு செய்துவருகிறது. இப்போது முதல் முறையாக இரண்டாம் உலப்போரில் உளவாளியாக இருந்த இந்திய வம்சாவளிப்பெண் நூர் இனாயத் கான் இந்த நினைவுத்தகடுகளைப் பெறுகிறார்.

மத்திய லண்டனில் உள்ள இரண்டாம் உலகப் போரின் உளவாளி நூர் இனாயத்கானின் இல்லத்திற்கு ப்ளூ பிளேக் எனப்படும் நீலத்தகடுகள் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டு நாஜி ஆக்கிரமித்த பிரான்சுக்கு பிரிட்டனின் சிறப்புச் செயல்பாட்டு நிருவாகியின் (SOE) இரகசிய வானொலி ஆபரேட்டராகப் புறப்படுவதற்கு முன்பு அவர் லண்டனின் ப்ளூம்ஸ்பரியில் உள்ள

4, டாவிடன் தெருவில் நூர் இனாயத் கான் வாழ்ந்த வீடு உள்ளது.

18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சிசெய்த திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய சூஃபி துறவி ஹஸ்ரத் இனாயத் கானின் மகள்தான் நூர். இவர் பிரிட்டனின் ரகசிய உளவாளியாக இருந்து 1944 இல் டச்சாவ் வதை முகாமில் கொல்லப்பட்டார். அப்போது கொல்லப்பட்டவர்கள் குறித்த அடையாளம் எதுவும் வெளிப்படுத்தப்-படவில்லை, இவரது உண்மையான பெயர் கூட அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. “நூர் இனாயத் கான் தனது பணிக்காக கடைசியாக இந்த வீட்டை விட்டு வெளியேறியபோது, ஒரு நாள் தான்  துணிச்சலின் அடையாளமாக மாறுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்’’ என்று வரலாற்றாசிரியரும் ‘ஸ்பை இளரசி: நூர் இனாயத் கானின் வாழ்க்கை’ எனும் நூலின் ஆசிரியருமான ஷ்ரபானி பாசு கூறினார்.

“அவர் ஒரு நிகரற்ற உளவாளி. ஒரு சூஃபி என்கிற முறையில் அவர் அகிம்சை மற்றும் மத நல்லிணக்கத்தை நம்பினார். ஆயினும் தன்னை வளர்த்தெடுத்த நாட்டுக்காக, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் தனது உயிரைத் தயக்கமின்றி வழங்கினார். நீல நிறத் தகடுடன் நினைவுகூரப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி நூர் இனாயத் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டின் வழியாக மக்கள் நடந்து செல்லும்போது, நூரின் கதை எதிர்காலச் சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்’’ என்கிறார் ஷ்ரபானி.

SOE என்பது 1940 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலால் அமைக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான பிரிட்டிஷ் ரகசியச் சேவையாகும். மேலும் நூர், நாஜி ஆக்கிரமிப்பு பிரான்சிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி ஆபரேட்டராவார். மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் லண்டனில் தங்கியிருந்த கட்டடங்களுக்கும் இதேபோன்ற நீல நிறத் தகடுகள் வழங்கப்-பட்டுள்ளன.

24
செய்து அசத்துவோம் : நீரில் மிதக்கும் ஊசிசெய்து அசத்துவோம் : நீரில் மிதக்கும் ஊசி3rd October 2020
அறிவியல்: மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?3rd October 2020அறிவியல்: மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?

மற்ற படைப்புகள்

2022_dec_32
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_dec_a3
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

உழவர் மதிப்பைப் போற்று!

Read More
2020_jul_v12
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி!

Read More
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by ஆசிரியர்

குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்

Read More
2021_feb_v29
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_nov_40
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
9th November 2022 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p