• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தெளிந்த மனம்

மார்ச்

அதிகாலை நேரம். பூஞ்சோலையில் பலவகை வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்போர் மனதைக் கவர்ந்து கொண்டிருந்தன. வண்டுகள் ரீங்காரமிட்டுப் பறந்து வந்து தேனருந்தி மகிழ்ந்து சென்றன.

வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டமும் தேனருந்த வந்து பூக்களின்மீது அமர்ந்தன. ஒரே ஒரு வண்ணத்துப் பூச்சி மட்டும் சோலையைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வந்தது.

இதனைப் பார்த்த ரோஜா மலர் ஒன்று, வண்ணத்துப் பூச்சி தன்னருகில் வந்தபோது, வண்ணத்துப் பூச்சியே! ஏன் இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறாய்? உனக்குப் பசிக்கவில்லையா அல்லது தேனருந்த விருப்பமில்லையா? அல்லது இச்சோலையில் உள்ள பூக்களில் எந்தப் பூவையும் உனக்குப் பிடிக்கவில்லையா என்று கேட்டது.

இதனைக் கேட்ட வண்ணத்துப் பூச்சி, ரோஜா மலரே, எனக்குப் பசி இருப்பதால்தான் இந்தப் பூஞ்சோலையைத் தேடி வந்தேன் என்றது.

பின் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறாயாம் என்றது ரோஜா மலர். இச்சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்களுள் எந்தப் பூவின்மீது அமர்ந்து தேனருந்தலாம் என யோசித்துப் பறந்து கொண்டிருக்கிறேன் என்றது வண்ணத்துப் பூச்சி.

இவ்வளவுதானா உனது அறிவாற்றல்? பசிக்குத் தேனருந்த பூக்களைத் தேர்வு செய்து அமர்வதில் உனக்கு இவ்வளவு குழப்பம் என்றால் வாழ்க்கையின் பிற பிரச்சினைகளை நீ எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவாய்? என்று கேட்டது ரோஜா மலர்.

அதற்கு வண்ணத்துப் பூச்சி, நீ உடனடியாக உனக்கு ஏற்படும் பிரச்சினைகளில் முடிவு எடுத்துவிடுவாயாக்கும்? அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது எளிது. தனக்கென்று வரும்போதுதானே குழப்பமாக இருக்கும் என்று கூறியது. ரோஜா மலர் புன்னகையுடன், மாலை நேரம் நீ பூஞ்சோலைக்கு வா. அப்போது என்னருகிலிருந்து நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதனைச் சமாளிக்கும் முறையினையும் தெரிந்துவிட்டுப் பிறகு பேசு என்றது.
மாலை நேரமும் வந்தது. ரோஜா மலரின் அருகில் பெரிய வண்டு ஒன்று தேனருந்தப் பறந்து வந்தது. அப்போது அடித்த காற்றுக்கு அசைந்தது ரோஜா செடி. மலரின் கீழே தண்டிலிருந்த முள் வண்டின்மீது குத்தியது. வேறு பூவில் சென்று அமர்ந்தது பெரிய வண்டு.

மாலை நேரம் என்பதால் காற்றும் நன்றாக வீசிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இன்னொரு வண்டு வந்தது. காற்றின் அசைவுகளில் தானும் சிறிது வளைந்து கொடுத்தது ரோஜா செடி. வண்டு ஏமாற்றம் அடைந்தது. இப்படியே அடுத்தடுத்து வண்டு முயற்சி செய்யும் போதெல்லாம் வளைந்து கொடுத்து வண்டிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ரோஜா மலர்.

அடுத்த பூவிற்குத் தாவியது வண்டு.

ரோஜா மலரின் புத்திசாலித்தனத்தை – சாதுரியத்தைப் பாராட்டியது வண்ணத்துப் பூச்சி. அப்போது ரோஜா மலர், தான் குழப்பம் இல்லாமல் இருந்ததால்தான் வண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. குழப்பத்தில் இருந்திருந்தால், என்னால் என்னைக் காப்பாற்றியிருக்க முடியுமா? எனவே, பலவற்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பாமல், விரைவில் தெளிவான முடிவினை எடுக்கப் பழக வேண்டும். மேலும், இந்த வண்டிடமும் ஒரு குறை உள்ளது என்றது. வண்டிடம் என்ன குறையைக் கண்டாய் என்றது வண்ணத்துப் பூச்சி.

வண்டிடம் விடாமுயற்சி இல்லை என்றது ரோஜா மலர். எப்படி என்று கேட்டது வண்ணத்துப் பூச்சி. மூன்று முறை முயற்சி செய்த வண்டு மீண்டும் ஓரிருமுறை முயற்சி செய்திருக்கலாம். அப்போது, காற்றின் வேகம் குறைந்திருந்தால் என்னால் வளைந்து கொடுத்து என்னைக் காப்பாற்றியிருக்க முடியாது.

ஒவ்வொரு உயிரினத்திற்கும், வரும் ஆபத்திலிருந்து தப்பித்து வெற்றிபெற கண்டிப்பாக ஒரு வழி இருக்கும். நாம்தான் ஆராய்ந்து தேடி தடைகளிலிருந்தும் _ துன்பங்களிலிருந்தும் மீள வேண்டும் என்றது.

மனிதர்களாகிய நாமும் நம்மிடம் உள்ள குழப்பத்தன்மை, முயற்சியின்மை போன்ற குறைகளைச் சிந்தித்து – ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி மீது வெற்றி வந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

– செல்வா

20
உலகநாடுகள் - சிங்கபூர்31st May 2011
மனம் வாழ்த்தும் மணியம்மையார்31st May 2011

மற்ற படைப்புகள்

மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

இது உலகத்திக்குப் புதுசு

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

மனம் வாழ்த்தும் மணியம்மையார்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

இந்திய விருதுகள்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

கடிக்கிறாங்க

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

புத்தர்

Read More
மார்ச்
31st May 2011 by ஆசிரியர்

மார்ச்-8 மகளிர் தினச் சிந்தனை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p