• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: கனவுகள் பலிக்குமா?

2020_sep_v36
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்

சிகரம்

உறங்கும் போது கனவுகள் வருவது இயற்கை. கனவுகள் பலவிதங்களில் வரும் வயதுக்கு, ஏற்ப கனவுகள் மாறுபடும்.

இப்படிக் கனவுகளில் வரும் நிகழ்வுகள் வாழ்க்கையில் பலிக்கும் (நடக்கும்) என்று மக்கள் நம்புகின்றனர். பகலில் காணும் கனவு பலிக்காது என்பர். விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்று நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கைகள் சரியா? உண்மையா? என்றால் இல்லை என்பதே அறிவியல் உண்மை.

கனவு என்பது நாம் எண்ணுவது, அடிக்கடி செய்வது, பார்ப்பது, கற்பனை செய்வது இவற்றோடு தொடர்புடையது. உறங்கும் போது  காட்சிகளாக வரும். கனவுகளோடு ஒன்றிவிடுபவர்கள் கனவுக் காட்சிகளுக்கு ஏற்ப சிரிப்பர், அழுவர், கோபப்படுவர். சிலர் கனவில் அடித்துக் கொள்வது போன்ற காட்சிகளால் உணர்ச்சிவயப்பட்டு, அருகில் படுத்திருப்பவரை அடித்துவிடுவதும், உதைப்பதும் உண்டு.

எனவே, கனவுகள் நம் நினைவுகளோடு, அனுபவத்தோடு தொடர்புடைய வெளிப்பாடுகள். மற்றபடி இதில் வருவதுபோல் நடக்கும் என்று எண்ணுவது அறியாமையாகும்.

ஒருவர் இறப்பது போல் கனவுகண்டால் அவர் இறந்துவிடுவார் என்பது தப்பு. அப்படி எவரும் இறப்பதில்லை. விபத்தில் அடிபடுவது போல் கனவு வந்தால் அப்படி வாழ்வில் விபத்து வருவதில்லை.

காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஏதாவது ஒன்றிண்டு நடந்துவிட்டால், கனவு பலிக்கும் என்று நம்புவது கண் மூடித்தனம்.

மேலும், கனவுகளை ஒட்டிய மூடநம்பிக்கைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, பாம்பு கடிப்பது போல கனவுகண்டால் கனவு கண்டவருக்குள்ள துன்பங்கள் நீங்கிவிடும் என்றும், நீரில் மூழ்குவதாகக் கனவு வந்தால் துன்பம் வரும் என்றும், மலை ஏறுவது போல் கனவு வந்தால் வாழ்வில் உயர்வு வரும் என்றும், பள்ளத்தில் வீழ்வது போல் கனவுகண்டால் வாழ்வில் வீழ்ச்சி வரும் என்றும் இன்னும் இப்படிப்பல நம்பிக்கைகள் உள்ளன. ஆனால், கண்ட கனவுகளுக்கும், வாழ்வில் நிகழக்கூடியவற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொடர்புபடுத்திக் கொண்டு அச்சப்படுவது அல்லது மகிழ்வது மூடநம்பிக்கையாகும்.

கனவுகள் எதிர் காலத்தில் நடக்கவிருப்பதைக் முன் கூட்டியே தெரிவிக்கக் கூடியவை என்பது மூடநம்பிக்கையேயாகும்.

கனவுகளின் பலன்கள் என்று புத்தகங்களே போட்டு விற்கிறார்கள். இப்படிப்பட்ட மூடநம்பிக்கை வளர்க்கும் நூல்களைப் பிஞ்சுகள் விலக்கிவிட வேண்டும். அறிவுக்கு உகந்த கருத்துகளைக் கூறும் நூல்களைப் படிக்க வேண்டும்.

23
நேர்பட ஒழுகுநேர்பட ஒழுகு3rd October 2020
அறிவியல்: கூகுளின் அக்காவும் குறளமுதனும்3rd October 2020அறிவியல்: கூகுளின் அக்காவும் குறளமுதனும்

மற்ற படைப்புகள்

2020_jul_v19
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2019_oct_v19
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th September 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
2022_mar_p10
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_dec_a8
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2022_april_22
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
4th April 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p