• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்

பெரியார் தாத்தா நினைவுநாள் – டிசம்பர் 24

தாழ்ந்து கிடந்த தமிழர் நெஞ்சைத்

தட்டி எழுப்பியவர் – அட

வீழ்ந்து கிடந்த மானம் தன்னை

மீட்டு நிமிர்த்தியவர்!

அறிவைத் துலக்க கல்வி கொடுக்கும்

ஆசான் ஆகியவர் – மனம்

மறந்து போன கொள்கைப் பிடிப்பை

மலர ஏவியவர்!

தேரான் நெஞ்சைத் தெளிய வைத்தே

திருப்பம் கூட்டியவர் – சமூகப்

போராட் டத்தின் புதிய மருத்துவம்

புலரக் காட்டியவர்!

மூடத் தனத்தில் தாவும் குரங்கு

மனத்தை உலுக்கியவர் – இங்கு

தேடக் கிடைக்கா மாந்தர் நேயத்

திருவை செதுக்கியவர்!

கண்ணிய மாகப் புவியில் வாழும்

கருத்தைத் தீட்டியவர் – நல்ல

பெண்ணிய வாழ்வு பெருமை கொண்டிட

பேதமை ஓட்டியவர்!

உதய ஞாயிறாய் ஒளியைத் தந்திட

உண்மை ஏந்தியவர் – மனம்

புதிய அறிவொளி பூக்க உலகிலே

பொதுமை ஊன்றியவர்!

– கல்லை மலரடியான்,

கல்லக்குறிச்சி.

34
இசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்றுஇசைப்போம் வாரீர்! - ஜாதி ஜாதி ஜாதி என்று16th November 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு25th December 2020பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தாவுடன் முதல் சந்திப்பு

மற்ற படைப்புகள்

2022_May_1
பாடல்கள்மே 2022
26th April 2022 by ஆசிரியர்

உழைத்து முன்னேறு

Read More
21
ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
16th July 2024 by - பாவலர் அழகு நிலவன், புதுக்கோட்டை

வேண்டும்! வேண்டாம்!

Read More
2022_april_8
ஏப்ரல் 2022பாடல்கள்
1st April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில்

Read More
2020_dec_v33
டிசம்பர் 2020பாடல்கள்
31st December 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – பத்து வயதில் ஒரு இன மொட்டு

Read More
2021_apr_v28
ஏப்ரல் 2021பாடல்கள்
29th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – மக்கள் நலத்துக்கு மதமா

Read More
1
ஆகஸ்ட் 2023பாடல்கள்பிஞ்சு 2023
2nd August 2023 by ஆசிரியர்

கலைஞர் தாத்தா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p