• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சுதந்திரதேவி சிலை

ஏப்ரல்

நியூயார்க் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவு எழில் கொஞ்சும் தீவு ஆகும். இத்தீவிற்கு, மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதே சுதந்திர தேவி சிலை.

அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலையினை உலக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு என்று கூறலாம். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிய 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம்தேதி நியூயார்க் நகரில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.

பாரிசில் உள்ள புகழ்பெற்ற ஈக்பல் கோபுரத்தை குஸ்தாவ் ஈக்பெல் என்னும் பொறியாளர் வடிவமைத்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு டெலக்ரவா என்பவர் ஓவியமாக வரைந்து தந்தார். இந்த ஓவியத்தை வைத்து பிரெடெரிக் பார்த்தோடியால் என்ற பிரான்ஸ நாட்டுச் சிற்பியால் உருவாக்கப்பட்டதே சுதந்திர தேவி சிலை. இதன் காப்புரிமையினையும் இந்தச் சிற்பி வாங்கியுள்ளார். பாரிசின் ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த மோரிஸ் கோச்சலின் என்ற பொறியாளர்தான் சுதந்திர தேவியின் உள்கட்டமைப்பையும் வடிவமைத்தார்.

இச்சிலை 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உயரம் 151 அடி. பீடத்தின் உயரம் 154 அடி. மொத்த உயரம் 305 அடி. சிலையின் எடை 252 டன். இடுப்புச் சுற்றளவு 35 அடி. வாயின் அகலம் மட்டும் 3 அடி. வலது கையில் தீச்சுடரினை ஏந்தி நிற்பதுபோல் உள்ளது. இதன் உயரம் மட்டும் 42 அடி. சிலையில் உள்ள கையில் இருக்கும் ஆள்காட்டி விரலின் நீளம் 8 அங்குலம் (ஏறத்தாழ 3/4 அடி). இதன் உயரத்தைக் கற்பனைக் கண்களால் பார்த்தால், சாதாரண மனிதனின் உயரம்போல் சுமார் 60 மடங்கு.

ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான ஸ்டோலோவை அணிந்துள்ள நிலையில் சிலை காணப்படுகிறது. சிலையின் இடது கையில் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி உள்ளது. அதன் முகப்பில் அமெரிக்கச் சுதந்திர தினத்தைக் குறிக்கும் ஜூலை 4, 1786 என்று ரோமன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. வலது கையில் சுதந்திரத் தீச்சுடர் உள்ளது. பாதம் அடிமைத்தளை அறுக்கப்பட்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் உள்ளது. இதில் 7 கதிர்கள் (கிரணங்கள்) உள்ளன. உலகின் 7 கண்டங்களிலும், 7 கடல்கள் உள்ள பரப்பளவிலும் சுதந்திர ஒளி பரவட்டும் என்று சொல்லத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் உள்ளே 354 படிக்கட்டுகளும், 25 ஜன்னல்களும் உள்ளன. பிரான்சில் செய்யப்பட்டு, தனித்தனியாகப் பிரித்து, 24 பெட்டிகளில் வைத்து, கப்பலில் கொண்டுவந்து அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி குளேவர் கிளீவலாண்டசி 1886 இல் திறந்து வைத்தார். அமெரிக்காவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது.

பீடத்தினை அமெரிக்காவும், சிலையினை பிரான்சும் வடிவமைத்தன. அந்த நேரத்தில் இரு நாடுகளிலுமே கடுமையான நிதி நெருக்கடி இருந்தது. பலவிதமான கேளிக்கைகள் நடத்தி, கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்தது பிரான்ஸ். தங்களுக்குக் கொடுத்த பரிசுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், பாரிசில் வாழும் அமெரிக்க மக்கள், -சுதந்திர தேவி சிலை போன்ற இன்னொன்றை உருவாக்கி, பிரான்ஸ் ச்மக்களுக்குப் பரிசாகக் கொடுத்தனர். லீடெஸ்சைக்னஸ் என்ற இடத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை உருவாக்க 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாம்.

உலக வர்த்தக மய்ய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு சுதந்திர தேவி சிலையினைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிலையினைப் பார்த்துச் செல்கின்றனர். மான்ஹாட்டன் தீவிலிருந்து லிபர்டி தீவிற்குச் சென்றுவர படகுப் போக்குவரத்து உள்ளது. கடல்வழியாகச் செல்பவர்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது, கம்பீரத் தோற்றமுடைய ஒரு பெண்மணி சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியில் இருப்பது போன்ற தோற்றத்துடனும், கடலில் மிகப் பெரிய வீரன் வெற்றிக் களிப்போடு தீச்சுடரை ஏந்திவருவது போன்ற கம்பீரத் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறது.

19
விடுமுறையை இனிமையாக்க....31st May 2011
பொது அறிவு31st May 2011

மற்ற படைப்புகள்

ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

ராஜகுமாரனை மட்டும் தூக்கி எறியாதா

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

கடிக்கிறாங்க?

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

எதிர்கால லட்சியம்

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

கலங்கரை விளக்கங்களை கண்டுகொள்வோமா?

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

இறந்துவிட்டால் இந்த நூலை படிக்க முடியாதல்லவா?

Read More
ஏப்ரல்
31st May 2011 by ஆசிரியர்

பொது அறிவு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p