• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பறக்கும் தாவரம் கிளியக்கா!

2021_jan_v1
ஜனவரி-2021பாடல்கள்

பச்சை பச்சைக் கிளியக்கா

பவள மூக்குக் கிளியக்கா!

இச்சை மொழியாம் தமிழாலே

இனிக்கப் பேசும் கிளியக்கா!

பழங்கள் தொங்கும் கிளைகளிலே

பக்குவ மாக நீதொங்கி

அலகால் கொறித்துத் தின்கின்ற

அழகே அழகு! கிளியக்கா!

விஞ்சிடும் புகழை உனக்களிக்க

விழைந்தார் புலவர் பலரக்கா!

கொஞ்சும் தமிழார் இலக்கியத்தில்

கொண்டார் தூதாய் உனையக்கா!

‘அஞ்சுகம்’ என்றே அழகாக

அழைப்பார் தமிழில் கிளியக்கா!

எஞ்சிய பறவை இனமக்கா

எந்தம் ‘பிள்ளை’ நீயக்கா!

தத்தித் தத்தி நடக்குமுனைத்

‘தத்தை’ என்பார் கிளியக்கா!

கத்திக் ‘கீகீ’ எனுமுன்னைக்

‘கிள்ளை’ என்பார் கிளியக்கா!

மரங்களின் பொந்துகள் இடுக்குகள்தாம்

இருப்பிடம் உனக்காய் ஆனதக்கா!

தரத்தினில் முதலிடம் உனக்கக்கா

தருவார் ஆர்வலர் கிளியக்கா!

இலவங் காயும் பழுக்குமென்றே

எண்ணிநீ காத்திட வேண்டாமே!

பலவாய்ப் பழமரம் இருக்குதக்கா

புசித்திட அங்கே போ அக்கா!

நிறத்தில் ‘பச்சையம்’ கொண்டாலும்

நிலத்தில் முளைக்கா உனையக்கா

‘பறக்கும் தாவரம்’ எனக் கூறிப்

பெருமை கொள்வோம் கிளியக்கா!

– இளசைக் கோவன்

19
இசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டுஇசைப்போம் வாரீர்! - பத்து வயதில் ஒரு இன மொட்டு31st December 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்!20th January 2021பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: புத்தாண்டில் ஏற்போம் அய்ந்து செயலுறுதிகள்!

மற்ற படைப்புகள்

2022_april_26
ஏப்ரல் 2022பாடல்கள்
4th April 2022 by ஆசிரியர்

வெங்காயம்

Read More
2019_sep_a6
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

தங்கத் தாத்தா!

Read More
2021_jan_v19
ஜனவரி-2021பாடல்கள்
21st January 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – பொங்கலோ பொங்கல் தமிழர் பொங்கல்

Read More
2021_jan_v11
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

விபத்தாய் கிடைத்த வெடிமருந்து!

Read More
2020_feb_a13
பாடல்கள்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! : கொலைவாளினை எடடா!

Read More
25
செப்டம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
9th September 2023 by நீதிமணி, வேலூர்

சிறார் பாடல் : சோளக்கொல்லைப் பொம்மை!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p