• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் : DEGREES OF COMPARISION (ஒப்பீட்டு நிலைகள்) பகுதி – 20

2021_jan_v28
இலக்கணம்ஜனவரி-2021

கே.பாண்டுரங்கன்

வழிமுறை [Formula] 1:

as அல்லது so + Adjective as

வழிமுறை [Formula] 2:

Adjective + “er” + …than/ அல்லது

More+ Adjective+…than]

வழிமுறை [Formula] 3:

The + ‘est’ of  Adjective/  அல்லது The + Most + Adjective

(Degrees of Comparison) ஒப்பீட்டு நிலைகளின் பிரிவுகளைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தெரிவது என்ன?

மேலேயுள்ள விண்மீன்களைப் (பொருள்களைப்) பாருங்கள்.

Positive Degree:

இரண்டு பச்சை விண்மீன்கள் (இரு பொருள்களும்) அளவில் சமமாக உள்ளன. இதனை சமநிலைப் பண்பு (Positive Degree) என்போம். Positive என்றாலே நேர்மறை அல்லவா? இங்கே இரண்டு விண்மீன்களும் ஒரே அளவில் உள்ளன. அதாவது ஒன்றைப் போல மற்றொன்று உள்ளது. ஆங்கிலத்தில் இதை ணீs அல்லது so + Adjective + as என்ற (formula) வழிமுறை மூலம் எழுதலாம்.

“First Green Star is as small as Second Green Star”

முதல் பச்சை விண்மீன் இரண்டாவது பச்சை விண்மீன் போலவே சிறியதாக உள்ளது.

இங்கே small தான் adjective. அதை வழிமுறைப்படி எழுதிப் பாருங்கள்.

Comparative Degree

இரண்டாவது ஆரஞ்சு விண்மீன் முதல் ஆரஞ்சு விண்மீனைவிட அளவில் சிறியது அல்லது இரண்டு ஆரஞ்சு விண்மீன்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுள்ளன. இதனை (இரு பொருள்களும்) ஒன்றுக்கொன்று வேறுபட்ட நிலைப்பண்பு (Comparative Degree) என்போம். ஆங்கிலத்தில் இதை “er” + Adjective + …than/அல்லது More+Adjective + …than] என்ற வழிமுறை (formula) மூலம் எழுதலாம்.

“First Orange Star is bigger than Second Orange Star”

முதல் ஆரஞ்சு விண்மீன் இரண்டாவது ஆரஞ்சு விண்மீனை விட பெரியதாக உள்ளது.

Superlative Degree:

இங்குள்ள மூன்றாவது நீல விண்மீன் மற்ற எல்லா நீல விண்மீன்களைக் காட்டிலும் (அனைத்திலும்) பெரியது. இதனை உச்சநிலைப் பண்பு அல்லது உன்னத நிலைப்பண்பு (Superlative Degree) என்போம். ஆங்கிலத்தில் இதை The + “est” of Adjective அல்லது The +Most + Adjective என்ற வழிமுறை (formula)  மூலம் எழுதலாம்.

“Third Blue Star is the biggest One.’’

இப்படியும் எழுதலாம்…

“First Blue Star is the smallest One.”

முதலாம் நீல விண்மீன் மிகச் சிறியதாக உள்ளது.

இனி… மூன்று நிலைகளுக்கும் 3*3=9 என மொத்தம் ஒன்பது எடுத்துக்காட்டுகள் மட்டும் பார்ப்போம். புரிந்துகொண்டு விடுதலை அடைந்த பறவைபோலப் பறப்போம்.

எ.கா:1

Butter Milk is as ‘white’ as Milk .

மோர் பாலைப் போன்றே வெண்மையானது.

எ.கா:2

Darjeeling is ‘cooler’ than Ooty.

டார்ஜிலிங் ஊட்டியை விடக் குளிரானது.

எ.கா:3

Giraffee is the tallest animal in the world.

ஒட்டகச் சிவிங்கி தான் உலகிலேயே (அந்த) மிகவும் உயரமான விலங்கு.

எ.கா:4

Fight for the right is better than Quiet.

நியாயத்திற்காகப் போராடுவது என்பது அமைதியாக சும்மா இருப்பதைவிட சிறந்ததாகும்.

எ.கா:5

Mathi is as Simple as his brother

மதிஅவருடைய தம்பியைப் போல்  எளிமையானவர்.

எ.கா:6

I bought a pen which is the Cheapest in the Shop.

கடையிலேயே மிக மிக விலைக்குறைவான பேனாவை நான் வாங்கினேன்.

எ.கா:7

The Students are so brilliant as the Teacher.

மாணவர்கள் ஆசிரியரைப் போலவே புத்திசாலிகள்.

எ.கா:8

Tea is better than Coffe.

காபியை விட தேநீர் சிறந்தது.

எ.கா:9

mukil is the best writer in the Cless.

வகுப்பறையிலேயே முகில் சிறந்த எழுத்தாளன்.

தொடரும்…

22
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி21st January 2021
துடுக்குத் தம்பி21st January 2021துடுக்குத் தம்பி

மற்ற படைப்புகள்

2022_mar_p25
இலக்கணம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More
2021_jan_v32
கதைஜனவரி-2021
21st January 2021 by ஆசிரியர்

படக்கதை : கேள்வியின் நாயகன் சர்.அய்சக் நியூட்டன்

Read More
2021_jan_v15
ஜனவரி-2021பொது அறிவு
21st January 2021 by ஆசிரியர்

சாதனை 2020: உலகின் முதன்மைப் பதின்மர்!

Read More
2022_feb_v37
இலக்கணம்பிப்ரவரி 2022
5th February 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 30

Read More
2021_jan_v14
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

இயற்கை : வளரும் எவரெஸ்ட்

Read More
2021_jan_v41
ஜனவரி-2021பாடல்கள்
21st January 2021 by ஆசிரியர்

உறவுகள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • மூளையிலிருந்து நேரடியாக
    18th November 2025
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p