• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சூரியன்

2021_may_m1
பாடல்கள்மே 2021

வட்ட மாக உதித்துமே

வானில் வரும் சூரியன்!

திட்ட மாகக் கிழக்கெனும்

திசையில் வரும் சூரியன்!

கட்டுக் குலைந்து இருட்டுமே

களைய வரும் சூரியன்!

பட்டு ஒளியும் புவிக்கெலாம்

பரவ வரும் சூரியன்!

கொட்டி சேவல் முழக்கியே

கூவ வரும் சூரியன்!

தட்டி ஊரை எழுப்பவே

தாவி வரும் சூரியன்!

பட்டு முகில் முகட்டிலே

பளப ளக்கும் சூரியன்!

மட்டிலா மின்சாரமும்

மகிழத் தரும் சூரியன்!

சொட்டும் பனி விரட்டியே

சூடு தரும் சூரியன்!

கொட்ட விடும் வியர்வையை

கோடை காலச் சூரியன்!

விட்டு விட்டு மேகமும்

விழுந்து மூடும் சூரியன்!

கட்டி முகில் கலைந்ததும்

காட்சி தரும் சூரியன்!

பொட்டுப் போல மேற்கிலே

பொலியும் மாலைச் சூரியன்!

நெட்டை மலைக் கோட்டையுள்

நிதமும் மறையும் சூரியன்!

எட்டி என்றும் பார்வையில்

இருக்கும் அந்தச் சூரியன்

ஒட்டி வந்து தேர்தலில்

உதவும் சின்னம் சூரியன்!<

– தளவை இளங்குமரன், தென்காசி

25
அறிவு இயக்கம் காட்டிடுஅறிவு இயக்கம் காட்டிடு29th March 2021
பொதுமை உலகம் வேண்டும்!6th May 2021பொதுமை உலகம் வேண்டும்!

மற்ற படைப்புகள்

2021_may_m10
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
4
பாடல்கள்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

வெல் வெல் வெல்!

Read More
2024ஜூலை 2024பாடல்கள்
12th July 2024 by ஆசிரியர்

நான் செய்த கப்பல்

Read More
2022_oct_17
அக்டோபர் 2022பாடல்கள்
6th October 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_August_1
ஆகஸ்ட் 2022பாடல்கள்
1st August 2022 by ஆசிரியர்

தங்கம் வெல்வாய்

Read More
2021_nov_v4
நவம்பர் 2021பாடல்கள்
27th October 2021 by ஆசிரியர்

விளையாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p