• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நடைமுறை : மூச்சுக்காற்று மறைக்காமல் முகக்கவசம்…

2021_may_m7
பிஞ்சுகள் பக்கம்மே 2021

கா.அமுதரசன்

முகக்கவசம் அணிவதால் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு, முகக்கவசம் (மாஸ்க்) அணியும்போது விடும் மூச்சுக் காற்று கண்ணாடிக்குள் மூடுபனி போல் படிந்து கண்ணாடி மங்கலாகத் தெரியும். இதனால் கண்ணாடியை அடிக்கடி கழற்றித் துடைத்து மாற்ற வேண்டியதாக இருக்கும். இதனால் பார்வைத் திறனில் தெளிவின்மை உண்டாகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

1.            முகக் கவசத்தை அணிவதற்கு முன்பு, மூக்குக் கண்ணாடிகளில் அல்லது அவற்றின் லென்சுகளில், அதிகப்படியாகப் படிந்து இருக்கும் ஈரப்பதம் நீங்கும் வரை சோப்பு நீரால் கழுவ வேண்டும். பின் அவற்றை நன்றாகக் காய வைக்க வேண்டும் அல்லது ஒரு சுத்தமான மைக்ரோஃபைபர் துணி கொண்டு அதன் மேல் இருக்கும் ஈரத்தைத் துடைக்க வேண்டும்.

2.            முகக்கவசத்திற்கு உள்ளேயே மூச்சுவிடும் அளவிற்கு நாம் முகக்கவசத்தை மிகச் சரியான முறையில் அணிய வேண்டும். அதனால் வெளியேறும் வெப்பக் காற்று நமது மூக்குக் கண்ணாடிகளை அடைந்து அவற்றை மங்கச் செய்யாது.

3.            முகக்கவசம் அணியும்போது அதில் உள்ள பிளாஸ்டிக் கம்பியை மூக்கின் மேல், படுக்கை வசமாக இரண்டு பக்கமும் படிந்துவிடக்கூடிய வகையில் அழுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு பக்கமும் அந்த பிளாஸ்டிக் கம்பி நமது முகக்கவசத்தை மிகச் சரியாக கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். அதனால் முகக்கவசம் விலகுவதற்கும் வழி இருக்காது. அதனால் நாம் வெளியிடும் வெப்ப மூச்சுக் காற்று மூக்குக் கண்ணாடிகளை நோக்கிச் செல்ல முடியாமல் தடுக்கப்படும்.

4.            பிளாஸ்டிக் கம்பி இல்லாத முகக் கவசங்களில்: நீங்கள் பயன்படுத்தும் முகக்கவசத்தின் மீது மேல்புறம் மூக்குப் பகுதியில் சாதாரணமான டிஷ்யூ பேப்பரை பக்கவாட்டின் இருபுறங்களிலும் மடித்து, பேப்பரை இரண்டு அல்லது மூன்று மடக்காக்கி முகக்கவசத்தில் வைத்து அவை நகராமல் அப்படியே முகக்கவசம் கட்டிவிட வேண்டும். இதனால் முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்தினாலும் சுவாசத்தால் ஏற்படும் ஈரத்தை டிஷ்யூ பேப்பர் உறிஞ்சிக்கொள்வதால் ஈரம்  கண்ணாடியில் படாது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசத்தின் மேல் பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்.

5.            முகக்கவசத்திற்கு மேல் மூக்குக்கண்ணாடி அணியும்போது, மேலே இழுத்து, உங்களது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்யமுடியும். அதனால் மூக்குக்கண்ணாடி, முகக்கவசத்திற்கு மேல் மிகவும் இறுக்கமாக அமர்ந்திருக்கும்.

6.            உங்களின் கண்ணாடிக்கு ஸ்பெஷல் கோட்டிங் செய்யவில்லை எனில், கவலை இல்லை. முகச் சவரத்திற்குப் பயன்படுத்தும் போம் (திஷீணீனீ) –_அய்  கண்ணாடிகளின் உள்புறத்தில் பூசி துடைத்துவிட்டு அப்படியே காய வையுங்கள். ஈரம் போனதும் பயன்படுத்துங்கள். இதனால் சோப்பு கண்ணாடியில் லேயராக படிந்து நீர்த்துளி மூடுபனி போல் படிவதைத் தடுக்கும்.<

20
எப்படி கூட்டினாலும் 15 வரனும்எப்படி கூட்டினாலும் 15 வரனும்6th May 2021
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடர்புடைய இருபது சொற்கள்6th May 2021புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடர்புடைய இருபது சொற்கள்

மற்ற படைப்புகள்

3
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
28th February 2025 by - ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 12: ஸ்காரா ப்ரே: மலைப் பாறைகளில் ஒரு பழைய்ய்ய்ய் குடியிருப்பு

Read More
2022_oct_29
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

குழந்தை வளர்ப்பு

Read More
2020_jan_a11
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2021_may_m25
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_aug_v13
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_aug_v19
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

வரைந்து பழகுங்கள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p