• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

முதன் முதலில் விண்வெளியில் வலம் வந்த விந்தை மனிதர்

மே

யூரி அலெக்சேவிச் சகாரின்
(YURI ALEKSEVICH GAGARIN) – 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968

வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்ந்து மனித இனமும், உலகும் வளமும் நலமும் பெற விழைபவர்கள் சிலர். அவர்களில் ஒருவர்தான் யூரி ககாரின் (YURI GAGARIN). இவர் வாழ்ந்தது 34 ஆண்டுகள்; ஆனால், நூறு ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள் சாதித்ததைவிடப் பன்மடங்கு சாதித்துப் புகழ் ஏணியின் உச்சியைத் தொட்டவர். ஆம்! 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் உலக நாடுகளின் பல ஆண்டுகாலக் கனவான, விண்வெளிப் பயணத்தை முதன் முதலில் வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர்தான் ககாரின். இவர் ஏப்ரல் 12 ஆம் நாள் 1961 இல் சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் 1 (VOSTOK 1) என்ற விண்கலத்தில் ஏறி 108 நிமிடங்களில் உலகை வலம் வந்து ஒரு வியத்தகு சாதனையைப் பதிவு செய்தார். இரஷ்யாவில் பிறந்தவர் எனினும் உலக நாடுகளின் பல ஆண்டுகாலக் கனவை நனவாக்கியதன் மூலம் தான் பிறந்த நாட்டிற்கும், உலகிற்கும் பெருமை சேர்த்தார். இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே விண்ணுல கிற்கும், மண்ணுலகிற்கும் பாலமமைத்தார். இவரது இத்தகு சாதனை இன்று வரை உலக மக்களின் நன்மையை நாடியதுடன் விஞ்ஞானத் தொழில்நுட்ப சாதனைகளின் முன்னோடியாகத் திகழ்கிறது. இவருக்குப் பின்னர் உலக நாடுகளிலிருந்து பல்வேறு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி – நிலவுக்குச் சென்று பல தொடர் ஆராய்ச்சி களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர். நம் நாட்டிலிருந்து நிலவு நோக்கிப் பயணித்த சந்திராயன் 1, அப்பாலோ 11 போன்ற விண்கலங்களும், இன்னும் இந்த அண்டவெளியில் புதைந்து கிடக்கும் பல்வேறு உண்மைகளை ஆராயத் தொடர் பயணம் மேற்கொள்ளும் பல நூற்றுக்கணக்கான விண்கலங்களுக்கும் யூரி ககாரின் ஒரு விடிவெள்ளி.

இளமைப் பருவம்

1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் நாள் முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் அமைந்த குலுசினோ (Klushino) கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயத் தொழிலாளர்கள். இவரது தந்தை விவசாயத்துடன் தச்சுவேலை பார்த்து வந்தார். இவரது தாயார் பணிசெய்து ஓய்ந்த நேரங்களில் அறிவு சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிந்தவர். இவர் ஏழு வயதினராக இருந்தபோது இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போர்க்கால அழிவுகளுக்கு அளவுண்டோ? ஜெர்மானிய நாசிப்படைகள் இரஷ்யாவைத் தாக்கின. அதனால் இவரது குடும்பம் சின்னாபின்னமாயிற்று. தந்தையார் தச்சுவேலையை விடுத்து இராணுவப்பணியில் சேர்ந்தார். இவரது வீடு ஜெர்மானிய அதிகாரி ஒருவரால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஒரு சிறு மண்குடிசை அமைத்து அதில் சுமார் இரண்டாண்டு காலம் வாழ்ந்து வந்தனர். இவரது தமையன்மார் இருவரும் நாசி ஜெர்மன் படையினரால் அடிமைத் தொழிலாளர்களாக 1943 ஆம் ஆண்டு வரை ஒடுக்கி வைக்கப்பட்டனர். இத்தகு சூழலில் ககாரின் தனது தமக்கையினால் வளர்க்கப்பட்டார்.

வறுமையிலும் செழுமை யூரி ககாரின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போதே தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் கொண்டார். 1951 ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கான தகுதியைப் பெற்றார். 1955 ஆம் ஆண்டு பட்டம் பெற்று சோவியத் நாட்டின் விமானப்படையில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டார். இவரிடம் அளவிட முடியாத திறமையும் – தொழில்நுட்பமும் – எத்தகைய பயிற்சிகளையும் பொறுமையுடன் கையாளும் திறனும் இருந்ததை இவரது மேலதிகாரிகள் உணர்ந்தனர். விண்கலங்களில் சென்று தம் உயிரையும் பணயம் வைத்து விவேகமுடன் செயல்பட இவருடன் 20 விண்வெளி வீரர்கள் தகுதி பெற்றிருந்தபோதும் – தலைமைப் பண்புடைய இவரைத்தான் எல்லோரும் முதன்முதலில் தேர்ந்தெடுத்தனர். எல்லோரும் எதிர்பார்த்த வண்ணம் தமது முதல் பயணத்தை உலக வரலாற்றில் பதிவுசெய்து வெற்றிக் கனியைத் தட்டிச் சென்றவர்தான் யூரி ககாரின். இவ்வாறு வரலாற்றுப் புகழ்மிக்க பயணத்தைத் தொடங்கு முன்னர் ககாரின் தமது முதல் விண்வெளிப் பயணத்தை சமதர்மம் பேணும் தன் சோவியத் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். மிகப்பெரிய சகாப்தத்தையே உருவாக்கும் இந்த விண்வெளிப் பயணத்தைத் தொடங்குமுன்னர் உற்றார் உறவினர், நண்பர்கள் புதியவர்கள் ஆகிய அனைவரையும் அன்பான வார்த்தைகளால் – ஆழ்ந்த சிந்தனைச் சொற்களால் ஆரத்தழுவி பிரியா விடை பெற்றார்.

ககாரினிடம் இருந்த உயர்பண்புகள்

நில உலகின் எல்லைகளைக் காண முயன்று முதலில் உதவியவர்கள் வாஸ்கோடகாமாவும், கொலம்பசும் ஆவர். அதற்கும் சற்று மேலாக விண்ணுலக எல்லைகளைக் காண முதன்முதலில் விண்ணிலே தடம் பதித்தவர் யூரி ககாரின். இவர் மனிதன் விண்ணில் வலம்வர வழிகாட்டிய விடிவெள்ளி. தன்னலம் கடந்து பிறர்நலம் நாடும் தகையாளர்; பிறர் உள்ளம் உவப்பப் பழகும் பண்பாளர் – நகைச்சுவையாளர் – நினைவாற்றலில் தனி இடம் பதித்தவர் – கற்பனைத்திறன் மிக்கவர் – சுற்றுப்புறத்திற்கு ஏற்பத் தன்னைத் தகுதிப்படுத்தும் மதி நுட்பம் கொண்டவர் – எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர் – அதி அற்புத மனிதர் என இவரைப்பற்றி இவரது விமானப்படை மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகு தகுதிகளையெல்லாம் ஒன்றாகப் பெற்றிருந்த இவரிடம் இருந்த ஒரே ஆயுதம் அனைவரிடமும் புன்முறுவல் காட்டும் மானுடப் பண்பு.

அடைந்த பாராட்டுகளும் பதவிகளும்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாளுக்குப் பிறகு இவர் உலக அளவில் பாராட்டப் பெற்றார். இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், பின்லாந்து, மற்றும் இங்கிலாந்து நாட்டில் லண்டன் – மான்செஸ்டர் ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்து உலகப் புகழ் பெற்றார். அதைத் தம் இனிய நினைவுகளாக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் நாள் இவர் சோவியத் நாட்டின் விமானப்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சோவியத் நாட்டின் மிக உயர்ந்த தகுதியான சோவியத் ஒன்றியத்தின் புகழுக்குரியவன் (“Hero of the Soviet Union’’) என்று பாராட்டப் பெற்றார். மாஸ்கோ நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த விண்வெளிப் பயிற்சி மய்யத்தின் (Consmonaut Training Centre) துணை இயக்குநர் பொறுப்பில் இருந்தார். இவர் மறைவுக்குப் பின்னர் அந்த மய்யம் இவரது பெயரில் இயங்கி வருகிறது. அத்துடன் இவர் வாழ்ந்த க்ழாட்ஸ்க் (Gzhatsk) நகரம் 1968 ஆம் ஆண்டு இவர் மறைவுக்குப் பின்னர் ககாரின் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 12 ஆம் நாள் சர்வதேச மனித விண்வெளிப் பயண தினமாக (International Day of Human Space Flight) அய்க்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி விண்வெளிவீரர் ககாரிக்குப் பெருமை சேர்த்துள்ளது.

இவரது நினைவாக இரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர் தினம் கொண்டாடப்பட்டு வருவது இவரது தகுதிக்கு மணிமகுடம் சூட்டியதற்கு நிகராகிறது. இந்த ஆண்டு (2011) மனிதன் வான்வெளி சென்று வாகைசூடிய பொன்விழா ஆண்டு. இவ்வாண்டினை உலக மக்கள் அனைவரும் நினைவில் நிறுத்தி – ககாரினைத் தொடர்ந்து செயற்கரிய சாதனைகளைச் செய்து அவரது பெருமைக்குப் பெருமை சேர்க்க வேண்டிய ஆண்டு.

விண்வெளியில் மிக உயரப் பறந்து அங்கிருந்து பூமியைப் பார்க்கிறார் ககாரின். அவரது வாயிலிருந்து வெளிவந்த முதல் வார்த்தைகள் நம்மை மெய்சிலர்க்கச் செய்கின்றன. கற்பனைக் கெட்டாத் தொலைவிலிருந்து இவ்வுலகைக் கண்டபோது அவர் உள்ளத்தெழுந்த உவகையைக் கவிதை வரிகளாக வடித்துள்ளார். வானுலகிலிருந்து நில உலகைக் காண்பதில் எல்லையிலா இன்பம் கொண்டேன் – உலகின் அழகிய தோற்றம் கண்டு வியந்தேன் – மகிழ்ந்தேன் – கருப்பு நிற வானில் ஒளிவீசும் விண்மீன்களின் கொள்ளை அழகில் என்னை இழந்தேன் என்பதே அவ்வரிகள். எழிலும், இனிமையும், விந்தையும் நிறைந்த இவ்வுலகினைப் போரிலிருந்தும் – பேராசை கொண்ட அதிகார வர்க்கத்திடமிருந்தும் காத்து அதன் இயற்கையை உள்ளபடி சுவைக்க – உணர இவ்வுலகம் விழிப்புடன் செயல்பட வேண்டும். இயற்கைதரும் இன்ப நிகழ்வுகளை இளைஞர் உலகம் என்றென்றும் காத்துப் போற்றி பெருமை கொள்ளவேண்டும் என்று இவ்விண்வெளி வீரர் பேரவா கொண்டிருந்தார். அவரது ஆசையை நிறைவு செய்வதும் – உலகினைக் காப்பதும் நம் கடமை.

யூரி மாணவராக இருக்கும்போது, அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த விவசாய நிலத்தில் விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியது. அந்த விமானம் ரஷ்ய யாக் வகை போர் விமானமாகும். போரில் ஈடுபட்டு தாக்குதலுக்கு உள்ளாகி கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த விமானிகள் எண்ணற்ற பதக்கங்களைச் சுமந்திருந்தார்கள். இது யூரியைப் பெரிதும் கவர்ந்தது. இது குறித்து, பின்னாளில் குறிப்பிட்ட யூரி ககாரின், ராணுவச் சேவையின் பெருமை குறித்து அன்றே எங்களுக்குப் புரிந்தது. அதற்கு நாம் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் புரிந்தது. நாங்கள் தைரியமான விமானியாவது என்று முடிவெடுத்தோம். அந்தக் கணம் அதுவரை இல்லாத ஒரு புதுவித, பெருமித உணர்வு எங்களை ஆட்கொண்டிருந்தது. என்றார்.

யூரி ககாரின் பயன்படுத்திய வோஸ்டோக் 1 – இப்போது மாஸ்கோ ஆர்.கே.கே. எனர்ஜியா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட் டுள்ளது. அங்கே அமர்ந்திருக்கும் யூரியின் உருவம் தெரிகிறதா?

விண்ணில் பறந்த யூரி ககாரின் அங்கு எந்தக் கடவுளையும் காணவில்லை என்று மத எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றில் குறிப்பிட்டார். அப்போதைய சோவியத் அதிபர் குருச்சேவ்.

விண்ணில் இருந்து இப்படித்தான் இறங்கி பூமிக்கு வந்தார் யூரி ககாரின்.

– சாரதாமணி ஆசான்

17
மே தினம் வந்தது எப்படி?31st May 2011
புத்தர்31st May 2011

மற்ற படைப்புகள்

மே
31st May 2011 by ஆசிரியர்

சஹ்ராவி அரபுக் குடியரசு

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

சுனாமி சொல்கிறது கடவுள் இல்லை

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

அறிவுப் பிஞ்சுகளே

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

அறிவுச்சுட்டியின் அதிரடி

Read More
மே
31st May 2011 by ஆசிரியர்

குதிரையை அடக்கிய சிறுவன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p