• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மரபு விளையாட்டு : நூற்றுக் குச்சி

2021_may_m31
பிஞ்சுகள் பக்கம்மே 2021

இனியன்

காய்ந்த தென்னை ஓலை குச்சி வைத்து விளையாடலாம். 2 முதல் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் வட்டமாக அமர்ந்து விளையாடலாம்.

ஒரு சாண் அளவில் 10 சிறிய குச்சிகளும், இரண்டு சாண் அளவுக்கு ஒரேயொரு பெரிய குச்சியும் தேவை.

மொத்தமிருக்கும் 11 குச்சிகளையும் கலைத்து தரையில் வீச வேண்டும். பெரிய குச்சி மீது ஏதாவது ஒரேயொரு சிறு குச்சியாவது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கலைத்துப் போட்டவர்  தொடர்ந்து விளையாட முடியும்.

இப்போது கீழே இருக்கும் குச்சிகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் போது பக்கத்து குச்சியின்மேல் பட்டுவிட்டாலோ அல்லது சிறிதளவு அசைந்தாலுமே விளையாடுபவர்  விளையாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். அடுத்த நபர் விளையாடத் தொடங்க வேண்டும்.

முதல் குச்சியையோ அல்லது தனித் தனியாகப் பிரிந்திருக்கும் குச்சிகளையோ எடுக்க மட்டுமே நேரடியாக கையைப் பயன்படுத்த வேண்டும். மற்ற குச்சிகளை எடுக்க கையில் இருக்கும் குச்சிகளையே பயன்படுத்த வேண்டும்.

எத்தனை குச்சிகளை ஒருவர் எடுக்கிறாரோ அத்தனை புள்ளி அவருக்கு.

பெரிய குச்சிக்கு 100 புள்ளி மதிப்பு.

சிறிய குச்சிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் 10 புள்ளி மதிப்பு.

ஒரே ஆட்டத்தில் ஒருவர் அத்தனை குச்சிகளையும் எடுத்துவிட்டால் அவர் தொடர்ந்து அடுத்தடுத்த முறையும் விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் அவரவர் எடுத்த புள்ளிகளின் மதிப்பைக் குறித்து வைத்துக் கொண்டு எத்தனை சுற்று வரை விளையாடப் படுகிறதோ  அதுவரை விளையாடலாம். இறுதியில் முடிக்கும் போது யார் அதிகப் புள்ளிகள் பெற்றிருக்-கிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

குச்சிகளை ஒருவர் எடுக்கும் போது மிக உன்னிப்பாக மற்றவர்கள் கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிது அசைந்தாலுமே கவனிக்க முடியும்.<

Gadgets  இல்லாத போன தலைமுறையின் விளையாட்டுகளைத் தமிழ்நாடெங்கும் தேடிக் கண்டுபிடித்து, அதை மேலும் பல குழந்தைகளோடு சேர்ந்து ஆடிவரும் இனியன், இந்த இதழில், நம் அம்மா அப்பா காலத்துக் குழந்தைகளுக்குத் தெரிந்த சில விளையாட்டுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

31
எண்களுக்கு ஏற்ப வண்ணந் தீட்டுக!எண்களுக்கு ஏற்ப வண்ணந் தீட்டுக!6th May 2021
கணக்குனா எனக்கு பிடிக்கும் ; எட்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் எப்போது சந்திக்கும்?6th May 2021கணக்குனா எனக்கு பிடிக்கும் ; எட்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் எப்போது சந்திக்கும்?

மற்ற படைப்புகள்

16
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by முனைவர் சு. தங்கலீலா

அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?

Read More
2020_feb_a16
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

பிழைகளைத் திருத்துங்கள்

Read More
2022_nov_5
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th November 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

Read More
2022_jan_v41
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
6th January 2022 by ஆசிரியர்

வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன்

Read More
2022_mar_p4
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

நான் ஏன் வெறுக்கணும்?

Read More
2020_dec_v5
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
25th December 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p