• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஜூலை 15 – கல்வி நாள் : இயற்கைப் பாடங்கள்!

2021_jul_v5
ஜூலை 2021பாடல்கள்

பள்ளிக் கூடம் மட்டும்தான்

படிப்பைத் தருமென் றெண்ணாதே;

புள்ளும் விலங்கும் பூச்சிகளும்

புதிய பாடம் கற்பிக்கும்:

கவளச் சோற்றைக் கண்டிட்டால்

காகம் காட்டும் ஒற்றுமையை;

குவளைப் பாலை அருந்திடும்நாய்

குழைக்கும் வாலை நன்றியுடன்;

உழைப்பின் மாண்பைக் கற்பிக்கும்

ஓயாத் தேனி நாள்தோறும்;

இழையும் எறும்பின் சுறுசுறுப்போ

எல்லோ ருக்கும் உயர்பாடம்:

சேவல் தினமும் கற்பிக்கும்

சிறப்பாய் நேரந் தவறாமை;

காவல் புரியும் நாய்கூடக்

கடமை மாண்பைக் கற்பிக்கும்:

தாய்மை பாசக் கல்விக்குத்

தரையில் பசுப்போல் வேறேது?

வாய்ப்பின் மாண்பைக் கற்பிக்கும்

வாடி நிற்கும் கொக்கிங்கே:

புத்த கங்கள் எல்லாமே

பொருந்தும் அறிவைத் தந்தாலும்

நித்தம் இயற்கை வழியாய்நீ

நிறைய பாடம் கற்றிடலாம்!

– கே.பி.பத்மநாபன்,

 

சிங்காநல்லூர், கோவை

24
தோட்ட உலகம்!தோட்ட உலகம்!1st June 2021
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - தாய்மாரே, தந்தைமாரே சேதி கேளுஙக..3rd July 2021பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - தாய்மாரே, தந்தைமாரே சேதி கேளுஙக..

மற்ற படைப்புகள்

2023_april_1
ஏப்ரல் 2023பாடல்கள்
4th April 2023 by ஆசிரியர்

மனிதகுலம் பகுத்தறிவால் மாண்பு பெற வேண்டும்!

Read More
25
செப்டம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
9th September 2023 by நீதிமணி, வேலூர்

சிறார் பாடல் : சோளக்கொல்லைப் பொம்மை!

Read More
1
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
4th January 2025 by ஆசிரியர்

”மருந்தும் விருந்தும் திருக்குறளே”

Read More
2
நவம்பர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
9th November 2024 by கே.பி.பத்மநாபன்

சுய மாண்பொளி ஏற்று

Read More
2022_July_1
ஜூலை 2022பாடல்கள்
6th July 2022 by ஆசிரியர்

மானிட மாண்பு

Read More
21
ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
16th July 2024 by - பாவலர் அழகு நிலவன், புதுக்கோட்டை

வேண்டும்! வேண்டாம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p