• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கடவுளும் கரோனாவும்!

2021_aug_v2
ஆகஸ்ட் 2021பாடல்கள்

‘கடவுளே மனிதனைப் படைத்தான்’ எனயினும்

கருதிடும் மடமையும் இருக்கிறது – அந்தக்

‘கடவுளை மனிதனே படைத்தான்’ எனும்புதுக்

கருத்தினை மனம்கொள மறுக்கிறது!

‘கடவுளை மற’நீ ‘மனிதனை நினை’யெனக்

கற்பித்த மனிதரை மறக்கிறது – அந்தக்

கடவுளின் மகிமையும் ‘கரோனா’ முகமையில்

காற்றினில் மறைந்தே பறக்கிறது!

கடவுளைத் தொழுவதும் மதங்களின் விதிகளில்

கணித்துள முறைகளில் நடக்கிறது – அந்தக்

கடவுளின் தொழுகையும் தொடர்ந்திடா விதமதில்

கரோனா நுழைந்தே தடுக்கிறது!

கடவுளால் முடிந்திடா மருந்தினை மனிதமும்

கண்டிடும் முயற்சிகள் எடுக்கிறது – அந்தக்

கடவுளின் முகந்தனில் கருந்திரை படர்ந்திடக்

காலமும் விரைந்தே கடக்கிறது!

கடவுளே படைத்ததாய்க் கதைப்பவர் உயிரையும்

கரோனா பறித்தே குடிக்கிறது – அந்தக்

கடவுளும் பயத்தினில் கருவறை இருட்டினில்

கதவுகள் அடைத்தே கிடக்கிறது!

கடவுளைப் படைத்ததாம் மனித்தமும்* பதறியும்

கதறியும் பதைத்தே துடிக்கிறது – எந்தக்

கடவுளின் வரத்தினில் கரோனாவைத் துரத்திநம்

கண்ணீரின் பெருக்கைத் துடைக்கிறது?

*மனித்தம் – மனிதம்*

– தளவை இளங்குமரன்,

 

இலஞ்சி, தென்காசி மாவட்டம்

33
தமிழே நம் சொத்து!தமிழே நம் சொத்து!4th July 2021
பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க!29th July 2021பிஞ்சுகளே, பிஞ்சுகளே! - களைகள் அகற்ற கலைகள் பயில்க!

மற்ற படைப்புகள்

2021_aug_v40
ஆகஸ்ட் 2021எண்ணிப்பார் 7 வேறுபாடு
4th August 2021 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2021_aug_v36
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

புத்தக அறிமுகம்

Read More
2021_oct_v31
நவம்பர் 2021பாடல்கள்
28th October 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று

Read More
2023_may_23
பாடல்கள்மே 2023
4th May 2023 by ஆசிரியர்

பாரம்மா…பாரம்மா…

Read More
2021_aug_v39
ஆகஸ்ட் 2021கதைகோமாளி மாமா
4th August 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-18 : நல்ல ஆசிரியர்

Read More
2022_sep_14
செப்டம்பர் 2022பாடல்கள்
8th September 2022 by ஆசிரியர்

கவிதை: தங்க தாத்தா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p