• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அசத்தும் அறிவியல் : மேஜிக் பால்

2021_aug_v38
அறிவியல்ஆகஸ்ட் 2021

அறிவரசன்

தேவையான பொருள்கள்:

*             பால்

*             உணவு நிறமி (கேசரி தூள் போல) அல்லது ஸ்கெட்ச் பேனாவின் நிறமியை கெட்டியாகத் தண்ணீரில் கலந்து, அதில் சில துளிகளைப் பயன்படுத்தலாம்.

*             பாத்திரம் கழுவும் சோப் / டிஷ் சோப் ஆயில்

*             பஞ்சு சுற்றப்பட்ட குச்சி (EarBuds)

பரிசோதனை செய்வது எப்படி?

1.            ஆழமற்ற ஒரு வாணலியில் மெல்லிய படலமாக சிறிதளவு பால் ஊற்றவும்.

2.            பாலில் உணவு நிறமித் துளிகள் சேர்க்க வேண்டும்.

3.            பின்னர் பஞ்சு சுற்றப்பட்டு குச்சியை எடுத்து பாத்திரம் கழுசும் சோப் ஆயிலில் முக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

4.            பின்னர் அக் குச்சியை பாலில் வைக்கவும். அதை ஓர் இடத்தில் அழுத்தி சுமார் 15 விநாடிகள் அதிலேயே வைத்திருங்கள்

என்ன நடக்கிறது?

பாலில் உள்ள வண்ணங்கள் சிதறி ஓடுவதைக் காணலாம்.

ஏன் நடக்கிறது?

பால் பெரும்பாலும் நீரால் ஆனது. அத்துடன் வைட்டமின்களும், தாதுக்களும், புரதங்களும் சிறிதளவு கொழுப்பும் கலந்த கரைசலாகும். பாலில் உள்ள கொழுப்புகளும் புரதங்களும், புதிதாகச் சேர்க்கப்படும் சோப் துளிகளால் எளிதில் புறத் தூண்டலுக்கு (EarBuds) உள்ளாகக் கூடியவை .

பாலில் சோப் துளி பட்டதும், இவ்வாறு வண்ணச் சிதறல் நடக்கும் ரகசியம் அந்தச் சிறிய துளி சோப்பின் வேதிப் பொருள்களில் உள்ளது.

சோப்பில் உள்ள மூலக் கூறுகளின் கட்டமைப்பை (Molecular Structure) மைசேல்ஸ் (Micelles) என்கிறோம். இந்த மைசேல்சில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று நீரில் இருந்து விலகக் கூடிய தன்மை கொண்ட (Water fearing) ஹைட்ரோ போபிக் எனப்படும் துருவமற்ற பகுதி. மற்றொன்று நீரை ஈர்க்கும் தன்மை கொண்ட (Water loving) ஹைட்ரோ ஃபிலிக் எனப்படும் துருவ மேற்பரப்பு.

பாலில் இருக்கும் கொழுப்பு ஒரு ஹைட்ரோபோபிக் மட்டுமே. எனவே அது தண்ணீரில் கரைவதில்லை.  எனவே, சோப் துளியைச் சேர்க்கும் போது சோப்பில் உள்ள ஹைட்ரோபோபிக், பாலில் உள்ள ஹைட்ரோ போபிக்குடன் சேர்ந்துவிடும். சோப்பில் உள்ள ஹைட்ரோஃபிலிக் பாலில் உள்ள தண்ணீருடன் சேர்ந்துவிடும்.

சோப்பின் மூலக்கூறுகள் பாலில் ஊள்ள கொழுப்பு மூலக் கூறுகளுடன் சேர, சுற்றிச் சுற்றி ஓடுகையில், அந்தக் கொழுப்பு வளைந்து, உருண்டு, திருப்பம் பெற்று அனைத்துத் திசைகளிலும் ஹைட்ரோபோபிக் மூலக்கூறுகளுடன் ஒன்றாக இணைகின்றன. இண்ட கொழுப்பு மூலக்கூறுகள் ஓடுவது ஜிம்னாஸ்டிக்ஸ் போன்று காட்சி அளிக்கும். சரி, இதில் இந்த உணவு நிறமிகளின் பங்கு என்ன? அவற்றை எதற்குச் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? பாலின் வெண்மை நிறத்தில், மேலே சொன்ன வேதி விளைவுகளை நாம் பார்க்க இயலாது. அதனால் தான் உணவு நிறமிகளையோ, அல்லது ஸ்கெட்ச் பேனாவின் வண்ணத் துளிகளையோ பயன்படுத்துகிறோம். பாலின் ஹைட்ரோபோபிக், சோப்பின் ஹைட்ரோபோபிக்கால் தேடிச்செல்லப்படுவதைக் காணவே இது பயன்படுகிறது. நடக்கும் வேதிவினைக்கும், நிறமிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை – நமக்கு வண்ண வேடிக்கை காட்டுவதைத் தவிர!

சோப்பு பாலுடன் சமமாகக் கலந்தவுடன் இந்தச் செயல் மெல்ல மெல்ல குறைந்து இறுதியில் நின்றுவிடும். அதிகக் கொழுப்பு உள்ள பாலில் இந்த வண்ண வேடிக்கை அதிகம் நடக்கும்.

பாலில் மேலும் கொழுப்பு இருக்கிறதா என்று பார்க்க, இன்னும் ஒரு துளி சோப் சேர்க்க முயற்சிக்கலாம். அப்படிச் செய்தால், முதல் முறை நடந்த நடனத்தில் ஒரு கூட்டாளரைக் (ஹைட்ரோ போபிக்) கண்டுபிடிக்காத கொழுப்பு மூலக்கூறுகள் பாலில் இருப்பதை நாம் காணலாம். செயல்முறையை மீண்டும் தொடங்க மற்றொரு துளி சோப்பைச் சேர்க்கவும்.

24
வாசகர் கடிதம்வாசகர் கடிதம்4th August 2021
கோமாளி மாமா-18 : நல்ல ஆசிரியர்4th August 2021கோமாளி மாமா-18 : நல்ல ஆசிரியர்

மற்ற படைப்புகள்

2
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by சரவணா இராஜேந்திரன்

ஒலிம்பிக் 2024: நட்புக்கான விளையாட்டு

Read More
2022_feb_v32
கணக்கும் இனிக்கும் (தொடர்)பிப்ரவரி 2022
5th February 2022 by ஆசிரியர்

கணக்கு: எண்ணோடு விளையாடு!

Read More
14
கணக்கும் இனிக்கும் (தொடர்)
13th December 2023 by உமாநாத்செல்வன்

கணக்கும் இனிக்கும் : புதிர்களுக்குப் பின்னால் இருக்கும் புதையல்

Read More
16
2024அறிவியல்மே 2024
29th April 2024 by சிகரம்

நினைவில் நிறுத்துவோம் : தொழில்நுட்ப வளர்ச்சி கேடு தருவதா?

Read More
2021_aug_v12
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
1st August 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: மதங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றனவா?

Read More
23
2024அறிவியல்ஜூலை 2024பிஞ்சு 2024
15th July 2024 by ஆசிரியர்

அறிவியல் – கரையான் புற்று கோவிலாகுமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p