• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உறுப்புகளால் உயர்க!

2021_aug_v43
ஆகஸ்ட் 2021பாடல்கள்

கண்கள் இரண்டும் இருக்கையிலே

கல்வி நூல்கள் படித்திடலாம்;

எண்ணும் எழுத்தும் கற்றிட்டால்

என்றும் உலகை வென்றிடலாம்!

காதி ரண்டின் வழியாய்நீ

*காசி னியினை வென்றோரின்

நீதி யாவும் கேட்டிடலாம்;

நீயும் உலகை வென்றிடலாம்!

நாவால் உரைக்கும் நல்லுரையால்

நற்சிந் தனையைப் பரப்பிடலாம்;

மேவாப் புகழின் மேதையென

மெய்யாய் உலகை வென்றிடலாம்!

கரங்கள் இரண்டும் இருக்கையில்நீ

கடின மாக உழைத்திடலாம்;

இரந்தே உண்டு வாழாமல்

இங்கே எதையும் வென்றிடலாம்!

இரண்டு கால்கள் இருப்பதனால்

எங்கெங் கும்நீ எட்டிடலாம்;

மரம்போல் நின்று மடியாமல்

மண்ணைக் கடந்தும் வென்றிடலாம்!

தோள்கள் இரண்டும் இருக்கையிலே

துணிவாய்ச் சுமையைச் சுமந்திடலாம்;

தூள்தூள் ஆகும் துன்பங்கள்;

தோல்வி யின்றி வாழ்ந்திடலாம்!

தலையின் உள்ளே அறிவிருக்க

தரையை வெல்லப் பயமெதற்கு?

மலையைக் கூடப் பொடித்தேநீ

மண்ணை வென்று காட்டிடலாம்!

இதயத் துள்ளே மனிதமுடன்

எல்லா உறுப்பும் செயல்பட்டால்

உதய மாகும் புதுவிடியல்;

உனதே வெற்றிச் சாதனைகள்!

*காசினி – உலகம்

– கே.பி.பத்மநாபன்,

 

சிங்காநல்லூர், கோவை

27
இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம்இசைப்போம் வாரீர்! - வெறுங்கை என்பது மூடத்தனம்4th August 2021
மன்னிச்சூ!4th August 2021மன்னிச்சூ!

மற்ற படைப்புகள்

2019_sep_a4
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

செப்டம்பர் 16 – உலக அமைதி நாள்

Read More
2022_june_1
ஜூன் 2022பாடல்கள்
30th May 2022 by ஆசிரியர்

தலைகவசம்

Read More
2023_feb_1
பாடல்கள்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

விலங்குகளைக் காப்போம்!

Read More
2021_aug_v2
ஆகஸ்ட் 2021பாடல்கள்
28th July 2021 by ஆசிரியர்

கடவுளும் கரோனாவும்!

Read More
2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

Read More
2021_aug_v39
ஆகஸ்ட் 2021கதைகோமாளி மாமா
4th August 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-18 : நல்ல ஆசிரியர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p