• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஓலிம்பிக் – நீரஜ் சோப்ரா டோக்கியோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

2021_sep_v18
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்

சரா

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.

ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர்.

அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்சத் தொலைவு 87.58 மீட்டர்.

ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்துக்கான நிலையைத் தக்க வைத்துக் கொண்டார்.

சிறிய வேறுபாட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த மில்கா சிங் உள்ளிட்ட அனைத்து தடகள வீரர்களுக்கும் தமது தங்கப் பதக்கத்தை அர்ப்பணம் செய்வதாக ஒலிம்பிக் தங்கம் வென்ற பின் நீரஜ் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக 90 மீட்டர் தொலைவைத் தாண்டி எறியும் ஜெர்மனி ஜோகன்னஸ் வெட்டர் தனது முதல் முயற்சியில் 82 மீட்டர் தொலைவு மட்டும் எட்டினார். மூன்று முயற்சிகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிக்க முடியாததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

அதே நேரத்தில் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார் நீரஜ் சோப்ரா. முதல் மூன்று முயற்சிகளிலும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறியும் உத்தியில் எந்தத் தவறும் ஏற்படவில்லை.

முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவின் தொலைவை வேறு எந்த வீரராலும் எட்ட முடியவில்லை. போட்டியாகக் கருதப்பட்ட வெட்டர் வெளியேறிய நிலையில், ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜூலியன் வெபர் மற்றும் செக் குடியரசின் விட்டேஸ்லேவ் வெஸ்லி ஆகியோர் மட்டுமே 85 மீட்டர் தொலைவுக்கு அதிகமாக வீசியிருந்தனர்.

முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவைத் தவிர வேறு யாரும் 86 மீட்டர் தொலைவைக்கூட எட்டவில்லை.

தொடக்கத்தில் இருந்து இறுதிவரை முதல் இடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். செக் குடியரசு நாட்டின் ஜேக்கப் மற்றும் வெஸ்லி ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

நீரஜ் சோப்ராவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி.<

33
நினைவில் நிறுத்துவோம் : சாதிக்க வயது தடையில்லை!நினைவில் நிறுத்துவோம் : சாதிக்க வயது தடையில்லை!30th August 2021
படக்கதை : ‘தமிழ்நாடு’ தந்த ‘அண்ணா!’30th August 2021படக்கதை : ‘தமிழ்நாடு’ தந்த ‘அண்ணா!’

மற்ற படைப்புகள்

2021_oct_v46
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
1st October 2021 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More
2021_may_m25
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_dec_a3
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

உழவர் மதிப்பைப் போற்று!

Read More
2022_april_29
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd April 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_dec_a8
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2022_nov_8
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th November 2022 by ஆசிரியர்

ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p