• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் உலகம் படைபோம் வா!

2021_oct_v3
அக்டோபர் 2021பாசத்திற்குரிய பேத்தி

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?

பள்ளிகள் உயர்நிலைகளில் திறந்து விட்டதால் உங்களுக்கு ஒரே கொண்டாட்டம் – மகிழ்ச்சி. காரணம், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை நேரில் பார்த்துக் கலந்துரையாடிடும் வாய்ப்பு சுமார் ஓராண்டுக்குப் பிறகு இப்பத்தானே கிடைச்சிருக்கு – இல்லையா?

என்றாலும், ‘முகக்கவசம், கிருமி நாசினி,  இடைவெளி, எல்லாம் பற்றி கவனமாக இருக்க வேணும்.’ ஞாபகம் இருக்கா?

உங்களுக்கெல்லாம் மற்றொரு துள்ளல் மகிழ்ச்சிச் செய்தி என்ன தெரியுமா?

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலகம்’ என்ற சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியார் தாத்தா அவர்களின் 95 அடி உயரச் சிலை + 40 அடி அடிபீடம் – மொத்தம் 135 அடியில் கம்பீரமாக நிற்கப் போகிறார் பெரியார் தாத்தா!

அது மட்டுமா? உங்களுக்கெல்லாம் உல்லாசமாக பொழுதுபோக்குக்குக் குழந்தைகள் நூலகம், பெரியார் வாழ்க்கை வரலாறு, போராட்டக் களங்களின் ஒலி_ஒளிக் காட்சி, அறிவியல் அறிவுலகம், கோளரங்கம் இப்படிப் பலப்பல அம்சங்கள். சுமார் 15 ஆண்டுகால வேலைத்திட்டம். இதில் இப்போது 6, 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. சில சில அடிக்கட்டுமானப் பணிகளில் ஒரு சிறு அளவு துவக்கப்பட்டுள்ளது. 7 தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) கிடைத்தும் ஒரே ஒரு அனுமதிச் சான்றிதழை பழைய அ.தி.மு.க. அரசு தராமல் 4, 5 ஆண்டுகளாக அப்படியே வைத்தது.

பெரியார் தாத்தாவும் திராவிடர் இயக்கமும் உங்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் சில மணி நேரத்தில், பல புத்தகங்களில் படிக்க வேண்டியவைகளைப் பார்த்து,  தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக பெரியார் உலகத்தில் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது!

அமெரிக்காவில் ‘டிஸ்னி வேர்ல்டு’ (Disney World) எப்படி பல அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளதோ, அதுபோல ‘பெரியார் உலகம்’ (Periyar World) அமையும்!

அதில் அறிவியலின் வியத்தகு வரலாற்றுச் சாதனைகள், சந்தித்த எதிர்ப்புகள், வெற்றிகள் பலவும் இடம் பெறும்.

பெரியார் தாத்தா பிறப்பதற்கு முன் _ அவர் பிறந்து, நமக்காக, நம் உரிமைகளுக்காகப் போராடியதற்குப் பின் சமூக, பண்பாட்டு, மொழி, உரிமை தளத்தில் _ பகுத்தறிவு முனையால் எப்படி சுயமரியாதைச் சூடு அனைவருக்கும் போட்டார் என்ற பாடங்களைக் கற்கும் வண்ணம் காட்சியகம் இருக்கும்.

மெழுகுப் பொம்மை அரங்கம் இருக்கும்! பெரியார் நூலகம் _ ஆய்வகம் இருக்கும்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எப்படி திராவிடம் முறியடித்தது என்பதை விளக்கும் வகையில் அமைவதோடு, நமது வேர்களின் விழுமியங்கள் -_ மதிப்பீடுகள் பற்றிய விளக்கங்கள் இடம் பெறும்!

தமிழ்நாட்டுப் பேரதிசயங்களில் ‘பெரியார் உலகம்’ முதன்மையானது என்று உலகத்தார் முதல் உங்களைப் போன்ற குழந்தைகள் வரை  ஒப்புக் கொண்டு மகிழ்ச்சியால் துள்ளி ஆடும் வகையில் அது அமையும்.

அதற்காக நீங்களும் வீட்டுக்கு ஒரு உண்டியல் வைத்து, நாளும் சேரும் சில்லரை முதல் சேமிப்பின் ஒரு பகுதி நன்கொடை வரை தாராளமாகத் தரத் தூண்டும் திட்டம் உண்டு!

‘பெரியார் உலகம்’ நமது பெரும் கனவுலகம்! காண்போம் விரைவில்! கடமையாகக் கருதி உதவுவோம் என்று உங்கள் தோழர்களுக்கும் கூறி, இணையதளத்திலும் இதுபற்றி பரப்பி கலந்துரையாடுவதை ஒரு முக்கியப் பணியாகக் கொள்ளுங்கள் பிள்ளைகளே!

‘இனிவரும் உலகம்’ என்ற புத்தகத்தில் பெரியார் தாத்தா அன்று கூறியவை எல்லாம் இன்று நம் கண்ணெதிரே, காணொலிக் காட்சி மூலம், ஆன்லைன் படிப்பு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பயன் பெறுகிறோம், பார்த்தீர்களா?

பெரியார் உலகம் ஓர் அறிவியல் தொழில் நுட்பத்தின் குழந்தை _ அற்புதங்களின் உச்சம்!  காண வாரீர், பெரியார் உலகை!

இப்படிக்கு,

 

உங்கள் பிரியமுள்ள

 

ஆசிரியர் தாத்தா,

 

கி.வீரமணி

27
கல்வியே கண்!கல்வியே கண்!28th September 2021
குறுக்கெழுத்துப் போட்டி28th September 2021குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2021_oct_v18
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
28th September 2021 by ஆசிரியர்

உலக நாடுகள் : கொசாவோ (KOSOVO)

Read More
2021_oct_v34
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th September 2021 by ஆசிரியர்

பெரியாரைத் தெரியுமா?

Read More
2021_oct_v46
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
1st October 2021 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More
2019_dec_a5
டிசம்பர் 2019பாசத்திற்குரிய பேத்தி
27th November 2019 by ஆசிரியர்

நலமா பிஞ்சுகளே?

Read More
2021_feb_v3
பாசத்திற்குரிய பேத்திபிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: அமெரிக்காவில் மீண்டும் துளிர்த்த ஜனநாயகம்

Read More
2021_oct_v47
அக்டோபர் 2021பாடல்கள்
1st October 2021 by ஆசிரியர்

மழை! மழை!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p