• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறார் கதை: கெடுப்பது ஒழி!

2021_oct_v50
அக்டோபர் 2021சிறார் கதை

கே.பி. பத்மநாபன்

 

‘கொழுக் மொழுக்’கென்று இருக்கும் அந்த அழகான வெள்ளை முயலைப் பார்க்கிறபோதெல்லாம் நரியாருக்கு அதன் இறைச்சியைத் தின்ன வேண்டுமென்ற தீராத ஆசையிருந்தது. ஆனால், அந்த முயல் எப்போதும் அவரிடமிருந்து தப்பித்தவாறேயிருந்தது. என்றும் சிங்கராஜா வேட்டையாடி சாப்பிட்ட பிறகு மிச்சமான எச்சிலையே சாப்பிட்டுவந்த நரியாருக்கு, இந்த முயலிறைச்சியைத் தின்ன ஒரு தந்திரம் தோன்றியது.

சில நாள்களாகவே சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேட்டையாடச் செல்லாமல் பலவீனமாகவே இருந்த சிங்கராஜாவிடம் சென்று, நரியார், “மகாராஜா, தங்களது உடல் பலமடைய, முயலிறைச்சி தின்றால் போதுமென்று நமது கரடி மருத்துவர் கூறுகிறார்’’ என்று கூற, சிங்கராஜா, “இப்போது என்னால் ஓடிச்சென்று வேட்டையாட இயலாத நிலையில், நான் எப்படி முயலை வேட்டையாடிப் பிடிக்க முடியும்?’’ என்று கேட்டார்.

“அதற்கு நானொரு உபாயம் கூறுகிறேன். நாளை நடக்கவிருக்கிற வனநாள் விழாவில் முயலுக்கும் ஆமைக்குமான ஓட்டப்பந்தயம் வைப்போம். தோற்கிறவருக்கு மரணதண்டனை என்று அறிவிப்போம். பண்டைய வரலாறு போலவே, திமிர் பிடித்த முயல் பாதி வழியினில் தூங்கிவிட…  ஆமை ஜெயிக்கும். தோற்ற முயலைத் தாங்கள் உண்டு நலமடையலாம்’’ என்றார் நரியார். சிங்கராஜாவும் ‘சரி’ என்று தலையாட்ட, நரியார் உற்சாகமாகப் பந்தயத்தைப் பற்றி அறிவிப்பதற்காகக் குகையை விட்டு வெளியே சென்றார். எதேச்சையாக அவ்வழியாக வந்த முயல்  மறைவிலிருந்து இதைக் கேட்டதும், நரியாரின் தந்திரத்தைப் புரிந்து கொண்டது. சற்று நேர யோசனைக்குப்பின், சிங்கராஜாவிடம் சென்று , “மகாராஜா, நரியார் கூறிய பந்தயத்தைத் தயவு செய்து வைக்க வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டது.

“ஏன்?’’ என்று கேட்டார் சிங்கராஜா.

“மகாராஜா, நரியாருக்கு என்னுடைய இறைச்சியைத் தின்ன வேண்டுமென்ற ஆசை. அவரால் என்னைப் பிடிக்க முடியாததால், வேண்டுமென்றே கரடி மருத்துவர் கூறியதாகக் கூறி, உங்களிடம் இந்த மாதிரியான பொய்யான யோசனையைத் தந்துள்ளார். என்னுடைய மூதாதையரான முயல் தாத்தா அன்றைய நாள் ஓட்டப்பந்தயத்தில் ஏதோ அசட்டுத்தனமாக உறங்கிவிட்டதால் தோற்றுப் போய்விட்டார். என்னதான் ஆனாலும், ஆமையார் என்னளவு வேகமாக ஓடவே முடியாதென்பதும், நான் நிச்சயமாக வென்றுவிடுவேன் என்பதும் உறுதி. நான் ஜெயித்துவிட்டால் நீங்களோ நரியாரோ என்னுடைய இறைச்சியை உண்ண முடியாது. ஆனால் பாவம், ஒன்றுமறியாத ஆமையார் தோற்றுவிட்டால், செய்யாத தவறுக்காக அவர் மரணதண்டனை பெற நேரிடும். ஒரு பந்தயம் என்பது, ஏறக்குறைய சம அளவு வலிமையுடையவர்களுக்கிடையே மட்டும்தான் இருக்க வேண்டுமேயன்றி, ஒரு வேகமானவனுக்கும் ஒரு மெதுவானவனுக்குமிடையே இருப்பது நியாயமில்லை, அல்லவா?’’ என்று கேட்டது முயல்.

சிங்கராஜா சிந்தித்தார். முயல் கூறியதில் முழுமையான நியாயம் இருப்பதையும், கெடுதல் செய்வதற்காகத் தன்னை நரியார் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் தந்திரத்தையும் எண்ணி அவருக்கு கோபம் வந்தது. முயலிடமே கேட்டார்: “இப்போ நான் என்ன செய்யலாம்?’’

நீங்களாக யோசிக்கவே மாட்டீர்களா “மகாராஜா! சரி போகட்டும். நானே ஒரு யோசனை சொல்கிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க-வேண்டும். நரியார் உபயோகித்த அதே மாதிரியான தந்திரத்தையே தாங்களும் பயன்-படுத்துங்கள். தாங்கள் கரடி மருத்துவரை இதுபற்றிக் கேட்டதாகவும், அதற்கு அவர், முதலில் உங்கள் உடலின் தற்போதைய பலத்தின் அளவை அறிய ஒரு மல்யுத்தம் செய்து பார்க்க வேண்டுமெனக் கூறியதாகவும், ஓட்டப் பந்தயத்திற்கு முன்னர் நரியுடன் நீங்கள் மல்யுத்தம் செய்யப் போவதாகவும் கூறுங்கள். தங்களை விடப் பலம் மிகவும் குறைந்த நரியாரிடமிருந்து நிச்சயமாக உண்மை வெளிப்படும்’’ என்றது முயல்.

வெளியே சென்ற நரியார், ஏனோ மறுபடியும் திரும்பி வந்ததால் இதையெல்லாம் மறைந்தபடியே கேட்டதும், பயத்தால் மிகவும் நடுங்கி, உள்ளே ஓடிவந்து, “மகாராஜா, என்னை மன்னிக்க வேண்டும். முயல் கூறியது உண்மைதான். நான்தான் கெட்ட எண்ணத்துடன் இதையெல்லாம் திட்டமிட்டேன்’’ என்று அழுது கதறியபடி சிங்கராஜாவிடம் விழுந்து கதறியது.

“மூட நரியாரே, ‘கெடுப்பது ஒழி’ என்ற அவ்வை மொழியை நீ கேட்டதில்லையா? மற்றவர்களைக் கெடுத்து, தான் மட்டும் வாழ நினைக்கும் தீக்குணம் விலங்குகளின் குணமல்ல என்று உனக்குத் தெரியாதா?’’ என்று நரியாரைக் கண்டபடி திட்டிய சிங்கராஜா, முயலின் அன்பான வேண்டு-கோளுக்கிணங்கி மன்னித்துவிட, நரியாரும் முயலும் சிங்கராஜாவின் முன்பாகக் கைகுலுக்கிக் கொண்டனர்.

32
வழிகாட்டுங்கள்வழிகாட்டுங்கள்1st October 2021
விளையாடு!27th October 2021விளையாடு!

மற்ற படைப்புகள்

2021_oct_v11
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
28th September 2021 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_nov_15
கதைசிறார் கதைநவம்பர் 2022
9th November 2022 by ஆசிரியர்

சிறார் கதை : பழுத்த இலை உதிரும்

Read More
2015_oct_pinju32
அக்டோபர்கதைசிறார் கதை
5th October 2015 by -மு.கலைவாணன்

அடிமை வாழ்வு

Read More
2022_May_216
சிறார் கதைமே 2022
30th April 2022 by ஆசிரியர்

சிறார் கதை: மனிதக் காட்சி சாலை

Read More
11
2024சிறார் கதைமே 2024
30th April 2024 by ஸ்ரீஜோதி விஜேந்திரன்

சிறார் கதை : கதை சொல்லப் போறேன்

Read More
2021_oct_v46
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
1st October 2021 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p