• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஓரு பக்கக் கதை : சரியாச்சா? தெரியலையே!

2021_dec_v22
கதைடிசம்பர் 2021

பா.கேழினி

முன்னொரு காலத்தில் ஒரு சிற்றூரில் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசதி மிகுந்தவராகவும் இருந்தார்.

ஆனால், கண் பார்வை அவருக்கு மங்கலான பார்வை. அதைக் குணமாக்கி நல்ல பார்வை பெற விரும்பினார்.

அதற்காக ஒரு மருத்துவரை வரவழைத்து குறையைக் குணமாக்க வேண்டினார். குறை நீங்கிவிட்டால் நல்ல சம்பளமும், ஒரு பரிசும் தருவதாகக் கூறினார். அப்படிக் குணமாகாவிடில் எதுவும் தருவதில்லை என்றும் கூறினார்.

மருத்துவர் கண் சிகிச்சையில் மிகவும் தேர்ந்தவராகையால் பாட்டியின் நிபந்தனையை ஏற்றார். மருத்துவர் நாள்தோறும் பாட்டி வீட்டுக்கு வந்து மருந்து போட்டுச் சென்றார்.

வாரக் கணக்கில் மருத்துவர் மருந்து போட்டுச் சென்றதில் பாட்டிக்குப் பார்வை தெரிய ஆரம்பித்தது. மீண்டும் எல்லோரையும் போல பார்க்க முடிந்தது.

மருத்துவர் நாள்தோறும் மருந்து போட்டுச் செல்கையில், பாட்டியின் பார்வைக் குறையைப்  பயன்படுத்தி அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களை எடுத்துச் சென்றார்.

நல்ல பார்வை பெற்ற பாட்டி வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருள்களைக் காணாததால் திடுக்கிட்டார்.

கண் பார்வையைக் குணமாக்கிய மருத்துவர் பாட்டியிடம் ஊதியத்தையும் நல்ல பரிசையும் கேட்டார்.

“என் பார்வை நன்கு தெரியவில்லை. என் வீட்டில் நான் வைத்திருந்த விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் எதுவும் தர முடியாது’’ என்று கூறினார் பாட்டி.

மருத்துவர் பஞ்சாயத்துக்குச் சென்றார். பாட்டி பஞ்சாயத்தில், “மருத்துவர் கூறுவது உண்மைதான். கண்கள் குணமானால் ஊதியமும் பரிசும் தருவதாகக் கூறினேன்.

மருத்துவம் செய்யத் தொடங்கும் முன் என் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் இருந்தன. அவற்றை இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. ஆகையால், என் கண்கள் குணமாகவும் இல்லை. ஒப்பந்தப்படி நான் எதுவும் அவருக்குக் கொடுக்க வேண்டியதுமில்லை” என்றார்.

கண் மருத்துவருக்கு பஞ்சாயத்து திருடன் பட்டம் சுமத்தித் தீர்ப்பு வழங்கியது.

அவர் திருடிய பொருள்கள் அவருக்குரியன அல்ல. பாட்டியின் பொருள்களாக இருப்பதால் அதுவே அவரின் ஊதியமும் பரிசும் ஆகும் என்றனர் பஞ்சாயத்தார். பாட்டியும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டாள்.

தீர்ப்பு சரியா? நீங்களும் கருத்துச் சொல்லலாம்.

31
நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகளே, பெற்றோரிடம் சொல்லத் தயங்காதீர்!நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகளே, பெற்றோரிடம் சொல்லத் தயங்காதீர்!29th November 2021
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 2829th November 2021தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] - 28

மற்ற படைப்புகள்

2021_dec_v8
கோமாளி மாமாடிசம்பர் 2021
27th November 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-21 : பொறுப்பு

Read More
4
கதைஜுலை,2025பிஞ்சு 2025
2nd July 2025 by Periyar Pinju

காட்டு வாசி -11 கூடியது நீதிமன்றம்

Read More
2020_may_v11
கோமாளி மாமாமே 2020
8th May 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா – எத்தனுக்கு எத்தன்!

Read More
2021_dec_v4
கதைடிசம்பர் 2021
27th November 2021 by ஆசிரியர்

சாதனை : நினைவாற்றல் கலையில் அசத்தும் சிறு குழந்தை!

Read More
2023_June_11
கதை கேளு கதை கேளுஜூன் 2023
10th June 2023 by விழியன்

டப்பென டமால் டிப்பென டிமீல்!

Read More
2021_sep_v35
கதைகோமாளி மாமாசெப்டம்பர் 2021
2nd September 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-19 : மறக்கக் கூடாது!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p