• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விளையும் பயிர்

2011_june_2-6
ஜூன்

1903 ஆம் ஆண்டில் வாழ்ந்த லண்டன் மக்கள் தங்கள் மாலைப் பொழுதினை நாடகம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர்.  பகல் முழுவதும் உழைத்த மக்கள் தங்கள் சோர்வைப் போக்கிக் கொள்ள கூட்டம் கூட்டமாக நாடகக் கொட்டகைக்குச் செல்வர்.  பல நாடகக் குழுக்கள் இருந்த காலம் அது.

சிறுவன் ஒருவன் தினமும் நாடக ஒத்திகை நடைபெறும் கொட்டகைக்கு வந்து அங்கு நடைபெறும் ஒத்திகைகளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.  அங்கு கொடுக்கப்படும் சின்னச் சின்ன வேலைகளையும் செய்து வந்தான்.  ஒருநாள் அங்கு ஷெர்லாக்ஹோம்ஸ் என்ற நாடகத்தின் கடைசிநாள் ஒத்திகை நடைபெற்றது.  மறுநாள் நாடகம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

அந்த நாடகத்தில் வேலைக்காரனாக நடித்த சிறுவனுக்குத் திடீரென காய்ச்சல் வந்துவிட்டது.  நாடகத்தை வேறு நாள் மாற்ற முடியாத நிலை. அந்தப் பாத்திரம் பேசும் வசனமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எனவே, உடனே வேறு யாருக்குப் பயிற்சி கொடுப்பது என்று அனைவரும் குழம்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வழக்கம்போல் வந்திருந்த சிறுவனைப் பார்த்ததும் தம்பி நாடகத்தில் ஒரு சிறு வேடம் இருக்கிறது, நடிக்கிறாயா? என்று கேட்டனர்.  அதற்காகவே காத்திருந்ததுபோல் எஸ் சார் என்றான் சிறுவன். தினமும் ஒத்திகை நடந்தபோது ஆர்வத்துடன் பார்த்ததினால் வசனங்கள் சிறுவனின் மனதில் நன்றாகவே பதிந்திருந்தன.  நாடகம் நல்ல முறையில் அரங்கேறியது.  நாடகம் பார்க்க வந்திருந்த அனைவரின் கவனத்தையும் தன் பேச்சாற்றலால் – நடிப்பாற்றலால் ஈர்த்தான்.  நிறைய நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் சிறுவனைத் தேடி வர ஆரம்பித்தன.  உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அந்தச் சிறுவனைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கினார்கள்..  பின்னாளில் திரைப்படங்களில் நடித்ததோடு 80க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, 20க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, பிறரை மகிழ்ச்சியூட்டிய இந்தச் சிறுவன் சார்லஸ் ஸ்பென்ஷர் சாப்ளின் என்ற இயற்பெயரைக் கொண்ட சார்லி சாப்ளின்.

18
அறிவியல் சோதனைஅறிவியல் சோதனை6th June 2011
உலகப் புகழ் பெற்றவர்கள்6th June 2011உலகப் புகழ் பெற்றவர்கள்

மற்ற படைப்புகள்

2011_june_2-2
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்..

Read More
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

சேதி தெரியுமா?

Read More
2011_june_3-5
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

உலகு சூழ் ஆழி – மு.நீ.சிவராசன்

Read More
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

2025 இல் விமானம் இப்படித்தான்

Read More
2011_june_2-4
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

அறிவியல் சோதனை

Read More
2011_june_lincoln
ஜூன்
6th June 2011 by ஆசிரியர்

தன்னம்பிக்கை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p