• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறள் கற்க எளிய வழி!

2021_dec_v34
டிசம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்

காலை நேர உறக்கத்தைக்

களைவாய் பத்தே நிமிடங்கள்;

மூலை தன்னில் அமர்ந்தபடி

முப்பால் நூலைக் கையிலெடு!

நாளும் புதிய குறளொன்றை

நன்றாய் மனனம் செய்துவிடு;

தாளும் ஒன்றை எடுத்ததில்நீ

தவறா மல்தான் எழுதிவிடு!

தினமும் ஒவ்வொரு குறளாகத்

திரட்டிக் கற்கத் துவங்கிட்டால்

மனமும் செம்மை யாகிவிடும்;

மனதுள் குறளும் பதிந்துவிடும்!

இரவில் படுக்கச் செல்லும்முன்

எழுதி வைத்த குறளினையே

உரக்கக் கூறி உருவேற்று;

உன்றன் நினைவில் தங்கிவிடும்!

பத்தே நிமிடச் சிறுவேலை;

பயனோ வாழ்நாள் முழுவதுமாம்;

முத்தே யான முப்பாலை

முழுதும் எளிதாய்க் கற்றிடலாம்!

அருமைக் குறளை அனுதினமும்

ஆனந்த மாகக் கற்றிடலாம்;

பெருமை மிக்க மாணவனாய்ப்

பீடு நடையே போட்டிடலாம்!

– கே.பி.பத்மநாபன்,

சிங்காநல்லூர், கோவை

36
தேடல்: ஒமுவாமுவாதேடல்: ஒமுவாமுவா30th November 2021
பொங்கல் வந்தது!30th December 2021பொங்கல் வந்தது!

மற்ற படைப்புகள்

2023_June_28
ஜூன் 2023பிஞ்சுகள் பக்கம்
10th June 2023 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_sep_v43
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
2nd September 2021 by ஆசிரியர்

மாண்டிசோரி (Montessori) முறை என்றால் என்ன?

Read More
2021_apr_v19
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
30
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 10: ஓலஸ் நகரம்

Read More
2020_nov_v12
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
15th November 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
5
அக்டோபர் 2023பிஞ்சுகள் பக்கம்
5th October 2023 by ஆசிரியர்

கைத்தொழிலும் குலத்தொழிலும்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p