• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பொங்கல் வந்தது!

2022_jan_v2
ஜனவரி 2022பாடல்கள்

தமிழர்திரு நாளான பொங்கல் வந்தது!

தைமுதலாம் நாளினிலே பொங்கல் வந்தது!

அமிழ்தினிலும் இனியதான பொங்கல் வந்தது!

அனைத்துயிர்க்கும் இன்பமான பொங்கல் வந்தது!

இமைகளோடு விழிகளான பொங்கல் வந்தது!

எருதுழவர் உழைப்பைப்போற்றும் பொங்கல் வந்தது!

சுமைகள்யாவும் களைவதான பொங்கல் வந்தது!

சுகங்கள்யாவும் விளைவதான பொங்கல் வந்தது!

சமயம்ஜாதி மதம்கடந்த பொங்கல் வந்தது!

சமத்துவப்பூ மணம்கலந்த பொங்கல் வந்தது!

அமைதிவாழ்வு மலர்வதான பொங்கல் வந்தது!

அகங்கள்யாவும் மகிழ்வதான பொங்கல் வந்தது!

இமயதீப வெளிச்சமாகப் பொங்கல் வந்தது!

இருண்டமூடப் பழக்கம்போகப் பொங்கல் வந்தது!

கமழும்வாசம் பரப்பும்வாசல் பொங்கல் வந்தது!

கதிரின்வானம் வரைக்கும்வீசும் பொங்கல் வந்தது!

திமிரும்ஏறு தழுவலான பொங்கல் வந்தது!

திறமைவீரம் தருவதான பொங்கல் வந்தது!

குமுறும்கோபத் தழலும்ஆறப் பொங்கல் வந்தது!

குளிரும்ஏறப் பொழியும்மாரிப் பொங்கல் வந்தது!

நமதுஊரை உறவைக்காணும் பொங்கல் வந்தது!

நலங்கள்சூழ வணங்கிவாழ்த்தும் பொங்கல் வந்தது!

குமையும்ஆசை முழுதும்தீரும் பொங்கல் வந்தது!

குறளின்ஆசான் புகழைக்கூறும் பொங்கல் வந்தது!

– தளவை இளங்குமரன்

 

இலஞ்சி

36
குறள் கற்க எளிய வழி!குறள் கற்க எளிய வழி!30th November 2021
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! புதுப்பானை, புத்தரிசி, புத்துருக்கு நெய்... புத்தாண்டு!30th December 2021பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! புதுப்பானை, புத்தரிசி, புத்துருக்கு நெய்... புத்தாண்டு!

மற்ற படைப்புகள்

1
நவம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
1st November 2023 by ஆசிரியர்

நேருக்கு நேர் நின்று பேசு!

Read More
2022_May_5412
பாடல்கள்மே 2022
28th April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_nov_v14
நவம்பர் 2019பாடல்கள்
26th October 2019 by ஆசிரியர்

வித்தகர் வள்ளியப்பா!

Read More
2022_april_26
ஏப்ரல் 2022பாடல்கள்
4th April 2022 by ஆசிரியர்

வெங்காயம்

Read More
2022_jan_v10
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
30th December 2021 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : கடவுளின் கண்களா?

Read More
2019_nov_v15
நவம்பர் 2019பாடல்கள்
29th October 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p