• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறார் கதை: வீடு… விளையாடு…

2022_jan_v23
கதைஜனவரி 2022

கோவி.லெனின்

மழை பெய்து கொண்டிருந்தது. விடுமுறை  நாள் என்றாலும் வெளியில் போக முடியவில்லை. கதிர், நிலா இருவரும் எப்போது மழை நிற்கும் என்று ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தார்கள்.

மெதுவாக வாசலுக்கு வந்து, மழைத் தண்ணீரில் கைககளை நீட்டினான் கதிர்.

வீட்டுக்குள்ளே இருந்து அப்பாவின் அதட்டலான குரல் கேட்டது. “என்ன பண்ணுறே கதிர்? மழையில நனையக்கூடாது” என்றார்.

“கையை மட்டும்தாம்ப்பா நனைத்தேன்” என்றான் கதிர்.

“கையும் உன்னோடதுதானே.. அடுத்தவங்க ளுடையது இல்லையே..” என்றார் அப்பா.

அப்போது அம்மாவின் குரலும் கேட்டது.

“கதிர்.. நிலா.. நீங்க இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேதான் இருக்கணும்” என்று அதட்டினார்.

நிலாவும் கதிரும் பெற்றோரின் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் இருந்தார்கள். மழை தொடர்ந்து பெய்தது.

“வீட்டுக்குள்ளே இருக்கிறது போர் அடிக்குது” என்றான் கதிர்.

“விளையாடலாமா?” என்றாள் நிலா.

“இந்த ரூமுகுள்ளே கிரிக்கெட் விளையாட முடியுமா?” என கதிர் கேட்டான்.

“கிரிக்கெட் விளையாட முடியாது. கேரம், செஸ், பல்லாங்குழி இப்படி விளையாடலாம்” என்றாள்  நிலா.

கதிருக்கு ஆர்வம்தான். ஆனால், “கேரம்_-செஸ் போர்டுகளைத் தேடணும். பல்லாங்குழிக்கு சோழி இல்லையே..” என்றான்.

“வார்த்தை விளையாட்டு விளையாடலாமே” என்றாள் நிலா.

“அது என்ன கேம்?” என்று கதிர் கேட்டான்.

அதற்கு நிலா, “நான் நம்ம வீட்டில் உள்ள ஒரு பொருளைச் சொல்வேன். அது யாருக்கு உரிமையானதுன்னு நீ சொல்லணும். அதுபோல நீ சொல்ற பொருளுக்குச் சொந்தக்காரங்க யாருன்னு நான் சொல்வேன்” என்றாள்.

“வித்தியாசமா இருக்கே.. இந்த விளையாட்டுக்கு பேர் என்ன?’’ என கதிர் கேட்டதும், “வீடு கேம் அப்படின்னு பேரு வச்சிக்கலாம். நாமதானே விளையாடப் போறாம். ஒலிம்பிக்குக்கா போகக் போறோம்” என்று நிலா சிரித்தாள்.

விளையாட்டு ஆரம்பமானது.

கதிர்:  “ஸ்கூட்டர்?”

நிலா: “அப்பா”

கதிர்:  “கரெக்ட்டா சொல்லிட்டே”

நிலா: “வாக்கிங் ஸ்டிக்”

கதிர்:  “தாத்தா”

நிலா: “ம்… கரெக்ட்”

கதிர்:  “ஓகே.. ஆளுக்கு ஒரு மார்க். இப்ப நான் கேட்குறேன்… புடவை?”

நிலா: “அம்மா”

கதிர்:  “பந்து”

நிலா: “நிலா. அதாவது, என்னோடது”

கதிர்:  “இல்லை.. என்னோடது”

நிலா: “எனக்குதான் அப்பா வாங்கிக்  கொடுத்தாரு”

கதிர்:  “என்னைத்தான் அம்மா விளையாடச் சொன்னாங்க”

நிலா: “ஓ.கே.. அதை விட்டுடலாம்.. வேற கேளு”

கதிர்:  “வீல்சேர்”

நிலா: “பாட்டி”

கதிர்:  “கிச்சன்”

நிலா: “அப்பா”

அவள் பதில் சொன்னதும் கதிர் பலமாகச் சிரித்தான். நிலா கண்டுகொள்ளாமல் அடுத்த கேள்வி கேட்டாள்.

நிலா: “புக் செல்ஃப்”

கதிர்:  “அப்பா”

அவன் பதில் சொன்னதும் நிலா சிரித்தாள். கதிர் அவளிடம், “நான் சரியாத்தானே சொன்னேன். அப்பாதானே புத்தகங்கள் வாங்கிட்டு வந்தாரு. அதனால புக் செல்ஃப் அவரோடதுதானே?”

“ஓ.. அப்படியா?” என்று கேட்ட நிலா, “கிச்சனுக்கான மளிகை சாமான்களும் அப்பாதானே வாங்கித் தர்றாரு. அப்ப கிச்சன் அவரோடதானே?” என்றாள்.

“அதெல்லாம் இல்லை.. அம்மாதான்  சமைக்கிறாங்க. அதனால கிச்சன் அம்மாவோடதுதான்” என்று அடம் பிடித்தான்.

இருவரும் சத்தமாகப் பேசிக்கொள்வதைக் கேட்டு அம்மாவும் அப்பாவும் அங்கே வந்தார்கள். தங்களுடைய விளையாட்டையும் அதில் ஏற்பட்ட குழப்பத்தையும் நிலாவும் கதிரும் விவரித்தார்கள்.

அதைக் கேட்டுவிட்டு அப்பா சொன்னார், “வீடே நம்முடையதுதான். படிக்கிறவங்களுக்கு எல்லாருக்குமே புக் செல்ஃப் சொந்தம். நிலாவும் கதிரும்கூட ஸ்கூல் புக்ஸை படிச்சபிறகு இதைப் படிக்கலாம்” என்றார்.

“ஆமாம்” என்ற அம்மா, “கிச்சனில் நான்தான் சமைக்கணும்னு கிடையாது. அதுமாதிரி நானேதான் கூட்டிப்பெருக்கணும், துவைக்கணும்னும் கிடையாது. என்னோட வேலையை அப்பாவும் பங்கு போட்டுக்குவாரு. நான் ஒரு பொருள் வாங்கணும்னா அவரோட ஸ்கூட்டரை ஓட்டிக்கிட்டுப் போவேன். அதனால, இப்போதைக்கு நம்ம வீட்டுல டிரஸ் மட்டும்தான் தனித்தனி. மற்றதெல்லாம் எல்லாருக்கும் சொந்தம்” என்றார்.

“அப்படின்னா சரி.. நாளைக்கு நானும் நிலாவும்தான் சமைக்கப் போறோம்” என்றான் கதிர்.

“உங்க விளையாட்டு, எங்களை சோதிக்கப் போகுதா?” என்று அம்மாவும் அப்பாவும் சிரித்தனர்.

32
பெரியார் திடலின் தாக்கம்!பெரியார் திடலின் தாக்கம்!4th January 2022
சாதனை : இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்துப் பெற்ற பல்துறைச் சாதனைச் சிறுமி4th January 2022சாதனை : இங்கிலாந்து ராணியிடம் வாழ்த்துப் பெற்ற பல்துறைச் சாதனைச் சிறுமி

மற்ற படைப்புகள்

2020_apr_v18
எப்ரல் 2020கோமாளி மாமா
27th March 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-4

Read More
8
கதைகதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
8th September 2023 by விழியன்

மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா

Read More
6
கதைகோமாளி மாமாஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by மு. கலைவாணன்

கோமாளி மாமா-36 : புத்தியைத் தீட்டு

Read More
2020_dec_v25
கோமாளி மாமாடிசம்பர் 2020
28th December 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-11 : உன்னை நம்பு

Read More
8
2024கதை கேளு கதை கேளுஜூலை 2024பிஞ்சு 2024
16th July 2024 by விழியன்

கதை கேளு… கதை கேளு…இந்த மலைக்கே

Read More
2022_oct_15
அக்டோபர் 2022கதை கேளு கதை கேளு
6th October 2022 by விழியன்

எழுதினான்… எழுதிக்கொண்டே இருந்தான்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p