• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கோமாளி மாமா-26

2022_May_369
கதைகோமாளி மாமாமே 2022

மதிப்புக்குரியவங்க !

மு.கலைவாணன்

மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் கதை கேட்கத் தோட்டத்திற்கு வந்துவிட்டனர். கோமாளி மாமா வராததால் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“எங்க வீட்ல தாத்தா தொல்லை தாங்க முடியல…’’ என குறைபட்டுக் கொண்டான் செல்வம்.

“ஏன்? எப்பப் பாத்தாலும் ‘படி படி’ன்னு சொல்றாரா,,,’’ என்றாள் மல்லிகா.

“அப்படி சொன்னாக்கூட பரவால்லே… அந்தக் காலத்துல… நாங்க படிக்க பல மைல் தூரம் நடந்து போனோம்னு… அவரு பள்ளிக்கூடம் போன கதையச் சொல்ல ஆரம்பிச்சுடுறாரு…’’ என்றான் செல்வம்.

“ஆமாடா… எங்க வீட்ல கூட எங்க பாட்டி அந்தக் காலத்துல ரூபாய்க்கு பத்துப் படி அரிசி கிடைக்கும்னு பழைய கதையத்தாண்டா சொல்றாங்க’’ என்று தன் வீட்டில் நடப்பதைச் சொன்னான் மாணிக்கம்.

அந்த நேரத்தில் அங்கு வந்த கோமாளி… “என்ன… ஏதோ பழைய கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கீங்களா…?’’ என்றார்.

“இல்லே மாமா! பழைய காலக் கதையைப் பேசி எங்களை பாடா படுத்துற தாத்தா, பாட்டிங்களைப் பத்தி பேசிக்கிட்டிருக்கோம் மாமா’’ என்றாள் மல்லிகா.
“பழைய காலக் கதையைச் சொல்ற தாத்தா, பாட்டி உங்களுக்குச் சிரமமா… தெரியுறாங்களா? அப்படி நினைக்கிறதே ரொம்ப ரொம்ப தப்பு.

இளமையா இருக்கிற உங்களுக்கும் முதுமை கட்டாயம் வரும். முதுமைங்கிறது அனுபவங்களின் தொகுப்பு. அவங்க சொல்றதைக் கேட்டதால இப்ப நாம எவ்வளவு முன்னேறி இருக்கோம்னு தெரியும். அவங்க சொல்றதைக் காது குடுத்துக் கேட்டாலே போதும். அவங்க மனசு மகிழ்ச்சி அடையும்.

பெரியவங்களாலே சில செயல்களைச் செய்ய முடியாமப் போகலாம். பெரியவங்க சொன்னாங்க என்று அறிவுக்குப் பொருந்தாததையும் ஏற்கவும் கூடாது. அதுக்காக அவங்களைப் புறக்கணிக்கக் கூடாது. சரி… சரி… வாங்க நான் உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்…’’ என்றபடி வழக்கமாக அமரும் மரத்தடியில் உட்கார்ந்தார். மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் அவரைச் சுற்றி உட்கார்ந்தனர்.

“மாமா, தாத்தா, பாட்டி கதைதானே சொல்லப் போறீங்க?” என்றான் மாணிக்கம்.

“மாமா சொல்லுவாரு… கொஞ்சம் பொறு’’ என்றாள் மல்லிகா.

“என் நண்பர் எனக்குச் சொன்ன கதை இது. நான் சொல்லி முடிச்சதும் உங்களுக்கே புரியும்” என்றபடி கதையைத் தொடங்கினார்.

“ஒரு பாரசீக மன்னன்…
இறந்து போன தன் தாத்தாவின் நூறாவது நாள் சடங்கு செய்யறதுக்காக, தான் இருக்கிற இஸ்தான்பூர்லயிருந்து கப்பர்நாகூம் பட்டினத்துலே புதைக்கப்பட்டிருக்கிற தன் தாத்தாவின் சமாதிக்குப் புறப்பட்டான்.

மொத்தம் ஏழு நாள்கள் பாலைவனத்துல பயணப்பட்டுத்தான் அங்கே போய்ச் சேர முடியும். அதனால இளைஞர்கள் மட்டுமே அந்தப் பயணத்துல பங்கெடுத்துக்கணும். வயசானவங்க யாரும் பயணத்துல வரக்கூடாதுன்னு அறிவிச்-சுட்டாரு பாரசீக மன்னர்.

மன்னர் தன்னோட பரிவாரங்களையும், இளைஞர்களையும் அழைச்சிக்கிட்டு ஒட்டகங்-களிலே பாலைவனத்துப் பயணத்தைத் தொடங்கிட்டாரு.
ஒரு நாள் பயணம் முடியிறதுக்குள்ளேயே பாலைவனத்துல புயல் பயங்கரமா வீச ஆரம்பிச்சிடுச்சு.

கடுமையான புயல் வீசுனதுனாலே ஒட்டகங்கள் எல்லாம் திக்குத் தெரியாம திசை மாறிப் போயிடுச்சு.

மன்னரும், அவரு கூட சிலரும் வழி மாறிப் போயிட்டாங்க. யார் யாரு எங்க இருக்காங்கன்னு தெரியல. தண்ணி தாகம். சில பேரு இறந்தும் போயிட்டாங்க.
மன்னனுக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல. தாகத்துக்குத் தண்ணி இல்லாததாலே தாக்குப் புடிக்க முடியல.

அந்த நேரத்துல மன்னரோட இருந்த ஒரு இளைஞன், “மன்னா, தண்ணீர் இருக்கிற இடத்தை நான் சொல்றேன். இங்கே இருந்து தென்கிழக்கு திசையிலே ரெண்டு கல் தொலைவுல தண்ணி கிடைக்கும்”னு சொன்னான்.

தாகத்திலே தவிச்சுக்கிடந்த எல்லாரும் அவன் சொன்ன பக்கமாப் போனாங்க. கொஞ்ச தூரத்திலே அவன் சொன்னபடியே அங்கே தண்ணி இருந்தது. எல்லாரும் தண்ணீரைக் குடிச்சு தாகத்தைப் போக்கிக் கிட்டாங்க.

மன்னனுக்கு மிகுந்த வியப்பா இருந்தது. உடனே அந்த இளைஞனைக் கூப்பிட்ட மன்னன், “உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? இந்தப் பாலைவனக் காட்டுல இந்த இடத்தில தண்ணி இருக்கும்னு…” தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“மன்னா…! என்னை மன்னிச்சுடுங்க. நான் ஒரு தப்பு செய்துட்டேன் மன்னா…” என்று மண்டியிட்டார் இளைஞன்.

“தாகத்துக்குத் தண்ணி இருக்கிற இடத்தைக் காட்டி, எங்க உயிரைக் காப்பாத்துன நீ எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டே… உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன் சொல்லு” என்றார் மன்னர்.

இளைஞன் தயங்கியபடியே, “அது வந்து மன்னா… என் அப்பா… உங்க தாத்தாவோட சேவகனா இருந்தவரு. அவரோட நூறாவது நாள் சடங்குல கலந்துக்க வருவேன்னு அடம்புடிச்சாரு மன்னா! நீங்களோ வயசானவங்க இந்தப் பயணத்துக்கு வரக்கூடாதுன்னு உறுதியாச் சொல்லிட்டீங்க. அதனால, நான் மறுத்துட்டேன்.

அவரு கேக்கல. ரொம்ப அடம் புடிச்சாரு. அவரை ஒரு சாக்குப் பையிலே போட்டுக் கட்டி என் ஒட்டகத்து மேலே சாப்பாட்டு மூட்டைகளோட சேர்த்து வச்சுட்டேன். தண்ணிக்காக சிரமப்பட்ட நான் அவர்கிட்டே சொன்னேன். அவரு சாக்குப் பையில ஒரு ஓட்டை போடுன்னு சொன்னாரு. ஓட்டை போட்டேன்.

அந்த ஓட்டை வழியாப் பாத்துட்டுதான் தண்ணி இருக்கிற இடத்தைச் சொன்னார். அதை எப்படிக் கண்டுபுடிச்சிங்கன்னு கேட்டேன். மாலை நேரத்துல சிச்சிலிப் பறவைகள் தண்ணி குடிச்சுட்டுத்தான் தூங்கும். நான் சாக்குத் துவாரத்து வழியா பார்த்தபோது தென்கிழக்கு திசையிலிருந்து அந்தப் பறவைகள் பறந்து வந்தது தெரிஞ்சுது. அதனால தான் அந்தப் பக்கம் தண்ணி இருக்கும்னு சொன்னதா சொன்னாரு” அப்படின்னு விளக்கினான்.

மன்னன் உடனே அந்தப் பெரியவரை சாக்குப் பையில இருந்து வெளியே கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு.

பெரியவங்களின் அனுபவம் அடுத்த தலை-முறைக்கு வழிகாட்டியா அமையக் கூடியதுங்கிறதை புரிஞ்சிட்டேன்னு சொல்லி அந்தப் பெரியவருக்குப் பரிசு கொடுத்து பாராட்டுனாரு பாரசீக மன்னரு.

இப்ப சொல்லுங்க… பெரியவங்க…” என கோமாளி மாமா சொன்னதற்கு, “எப்பவும் எங்களுடைய மதிப்புக்கு உரியவங்க”
உடனே பதில் சொன்னார்கள் மூவரும்.

– மீண்டும் வருவார் கோமாளி

 

27
இசைப்போம் வாரீர்!இசைப்போம் வாரீர்!28th April 2022
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:28th April 2022கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

மற்ற படைப்புகள்

2017_aug_b2
ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு
31st July 2017 by விழியன்

படிச்சா மட்டும் போதாது பல்லவி

Read More
4
அக்டோபர் 2023கதை கேளு கதை கேளு
5th October 2023 by விழியன்

டமடமடமால் : சிங்கமும் குட்டி எலியும்

Read More
2023_jan_28
கோமாளி மாமாஜனவரி 2023
6th January 2023 by ஆசிரியர்

கோமாளி மாமா-33 : மு.கலைவாணன்

Read More
5
2024கதைஜூலை 2024பிஞ்சு 2024
12th July 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? – மீண்டும் மதில்மேல் பூனையா?

Read More
2021_aug_v32
ஆகஸ்ட் 2021கதை
4th August 2021 by ஆசிரியர்

சிறார் கதை: காட்டில் ஊரடங்கு

Read More
2022_dec_14
கதைகோமாளி மாமாடிசம்பர் 2022
5th December 2022 by ஆசிரியர்

கோமாளி மாமா-32

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p