ஊஞ்சலாடுங்கள் தேன்சிட்டுகளே!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6ஆம் வகுப்பில் இருந்து 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிருமுறையாகவும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ இதழ் மாத இதழாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த இந்த இதழ்கள் பெரும் துணை புரியும் என்பதில் துளியும் அய்யமில்லை. தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பை ‘பெரியார் பிஞ்சு’ பெரும் மகிழ்வோடு வரவேற்கிறது. அறிவார்ந்த ஆக்கங்கள் பெருகட்டும்! தமிழ்க் குழந்தை இலக்கிய வெளி மிளிரட்டும்!