தமிழ்ச் சுரங்கம்
சீட்டா (Cheetah), லெட்பேட் (Leopard), ஜாக்குவார் (Jaguar) இவை அனைத்தையும் தமிழில் பலர் சிறுத்தை என்றே அழைக்கிறார்கள். இது சரியா?
இல்லை. மூன்றும் வெவ்வேறானவை.
* Cheetah= வேங்கை/ சிவிங்கிப் புலி
* Leopard= சிறுத்தைப் புலி
* Jaguar= தென்னமெரிக்கச் சிறுத்தை
தமிழிலக்கியத்தில் Jaguar கிடையாது, அது தென்னமெரிக்க வகை. பழங்காலத்தில், அது பற்றிய சேதி தமிழர்களுக்கு எட்டவில்லை.
ஆனால். இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேங்கை என்பது தான் சீட்டா (Cheetah). சிறுத்தை என்பது Leopard.
இரண்டும் அவற்றின் உடலமைப்புத் தவிர, தோல் நிறங்களாலும் எளிமையாக வேறுபடுத்தப்படுகின்றன.
= Cheetah என்றழைக்கப்படும் வேங்கையின் தோலில் புள்ளிகள் மட்டுமே இருக்கும். அப்படி இருப்பதால் தான் அதனை சிவிங்கிப் புலி என்றும் அழைப்பர். ஒட்டகச் ‘சிவிங்கி’ போல், ஒற்றைப் புள்ளி!
Cheetah என்பது வேங்கை தானே தவிர, சிறுத்தை அல்ல!
= உண்மையில் சிறுத்தை என்பது Leopard தான்! Leopard எனப்படும் சிறுத்தைப் புலியின் தோலில் புள்ளிகளைச் சுற்றிய கரு வட்டங்கள் Concentric Circles or Concentric Shapes இருக்கும்.
= சுருக்கமாக,
Cheetah= வேங்கைப்புலி / சிவிங்கிப்புலி
Leopard= சிறுத்தைப்புலி
தமிழில் இரண்டுமே புலி (Tiger) வகை தான்.
In English, they are addressed as big ‘Cats’ instead of Tigers.