உலக நாடுகள் வரிசை : லாவோஸ்
அமைவிடமும் எல்லையும்
* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு தெற்கே) மற்றும் தீர்க்கக்கோடுகள் 100o மற்றும் 108oE க்கு இடையில் அமைந்துள்ளது.
* இதன் அமைப்பு தீபகற்பம் போல் நீண்டு குறுகி இருந்தாலும் முற்றிலும் நிலப்பரப்புகளால் சூழப்பட்ட பகுதியாகும்.
* இந்த நாட்டின் எல்லைகளாக வடமேற்கில் சீனா, மியன்மார்; கிழக்கில் வியட்நாம்; தெற்கில் கம்போடியா; மேற்கில் தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைந்து உள்ளன.
இயற்கை அமைப்பும் காலநிலையும்
* காடுகள் நிறைந்த நிலப்பரப்பில் பெரும்பாலும் கரடுமுரடான மலைகள் உள்ளன. அவற்றில் மிக உயர்ந்தது ஃபவுபியா மலையாகும். இதன் உயரம் 2,818 மீட்டர் (9,245 அடி)
* இம் மலை, மேட்டுச் சமவெளிகள் எனப்படும் பீடபூமிகளின் தொடர்ச்சி ஆகும்.
* மீகாங் ஆறு தாய்லாந்துடனான மேற்கு எல்லையின் பெரும்பகுதியை உருவாக்குகிறது.
* அன்னமைட் மலைத்தொடரின் மலைகள் வியட்நாமின் கிழக்கு எல்லையின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன.
* தாய்லாந்து மலைப்பகுதிகளுடன் வடமேற்கு எல்லையை லுவாங் பிரபாங் மலைத்தொடர் உருவாக்குகிறது.
* இரண்டு மேட்டுச் சமவெளிகள் (பீடபூமிகள்) உள்ளன, சியாங்கோங் வடக்கில் மற்றும் தெற்கில் போலவன் பீடபூமி.
* இதன் பொது காலநிலை பெரும்பாலும் வெப்பமண்டல சவன்னா மற்றும் பருவமழை முறையை அடிப்படையாகக் கொண்டது.
* மே முதல் அக்டோபர் வரையிலான தனித்த மழைக்காலம், அதைத் தொடர்ந்து நவம்பர் முதல் ஏப்ரல் வரை வறண்ட காலம். மூன்று பருவங்கள் (மழை, குளிர் மற்றும் வெப்பம்)
* ஏனெனில், தட்ப வெப்பவியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட வறண்ட பருவத்தின் கடைசி இரண்டு மாதங்கள் முந்தைய நான்கு மாதங்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு வெப்பமாக இருக்கும்.
இயற்கை வளங்களும் பொருளாதாரமும்
* லாவோஸ் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு.
* விவசாயமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டுள்ளது.
* மேலும் விவசாயமே 80% வேலைவாய்ப்பை வழங்குகிறது. நாட்டின் 4% மட்டுமே விளைநிலம் மற்றும் 0.3% நிரந்தரப் பயிர் நிலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
* அரிசி இவர்களின் முக்கிய வேளாண் மற்றும் உணவுப் பயிராகும்.
* லாவோஸ் கனிம வளங்கள் நிறைந்தது.
* பெட்ரோலியம் மற்றும் எரிவாயு போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
* உலோகவியல் ஒரு முக்கியமான தொழில் ஆகும். மேலும் நிலக்கரி, தங்கம், பாக்சைட், தகரம், தாமிரம் மற்றும் பிற மதிப்புமிக்க உலோகங்களின் கணிசமான வைப்புகளை உருவாக்கவும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் உதவுகிறது.
* லாவோஸின் சுரங்கத் தொழில் பொருளாதார நிலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.
* தங்கம், தாமிரம், துத்தநாகம் , ஈயம் மற்றும் பிற கனிமங்களின் 540 க்கும் மேற்பட்ட கனிம வைப்புக்கள் கண்டறியப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
* லாவோஸ் மேங்காங் நதியின் மூலம் மின்ஆற்றலை உற்பத்தி செய்து தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுக்குக் கொடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறது.
* தற்போது பக்கத்து நாடுகளுடான உறவை மேம்படுத்திக்கொள்ளவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நான்கு நாடுகளுக்கு இடையிலான ரயில் பாதைத்திட்டத்தை நிறுவியுள்ளது.
* கிழக்காசியாவிலே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு எனவும், கடந்த பத்து ஆண்டுகளில் மெத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8 சதவித வளர்ச்சியைக் கொண்டுள்ளது லாவோஸ் எனவும் உலக வங்கி குறிப்பிடுகிறது
வரலாற்றுச் சுவடுகள்
* லாவோஸ் நாட்டின் வரலாற்று ரீதியிலான பெயர் லான் சாங் என்பதாகும்.
* இது 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய அரசுகளில் ஒன்றாக இருந்தது.
* பின்னர் உள்நாட்டுப் போர் காரணமாக, லான் சாங் மூன்று தனித்தனிப் பகுதிகளாக உடைந்தது.
* லுவாங் ஃபிராபாங், வியன்டியான் மற்றும் சம்பாசக். 1893 ஆம் ஆண்டில், மூன்று பிரதேசங்களும் ஒரு பிரெஞ்சுப் பாதுகாப்பின் கீழ் வந்தன; மற்றும் இப்போது லாவோஸ் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியை உருவாக்க ஒன்றிணைந்தன.
* ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு 1945 இல் இது சுதந்திரம் பெற்றது. ஆனால் 1949 இல் தன்னாட்சியை வெல்லும் வரை பிரான்சால் மீண்டும் காலனித்துவப்படுத்தப்பட்டது. லாவோஸ் 1953 இல் சிசவாங் வோங்கின் கீழ் அரசியலமைப்பு முடியாட்சியுடன் சுதந்திரமடைந்தது.
* சுதந்திரத்திற்குப் பிந்தைய உள்நாட்டுப் போர் தொடங்கியது.
* வியட்நாம் போர் 1975 இல் முடிவடைந்த பின்னர், கம்யூனிஸ்ட் பத்தேட் லாவோஸ் ஆட்சிக்கு வந்தார், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
* லாவோஸ் சோவியத் யூனியனின் இராணுவ மற்றும் பொருளாதார உதவியை 1991 இல் அது கலையும் வரை நம்பியிருந்தது.
* லாவோஸ் ஆசிய – பசிபிக் வர்த்தக ஒப்பந்தம், ஆசியான், கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் லா ஃபிராங்கோஃபோனி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
* லாவோஸ் 1997 இல் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராக கீகீவிண்ணப்பித்தது; 2 பிப்ரவரி 2013 அன்று, இந்நாட்டை முழு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிருவாகப் பிரிவுகளும் அரசு அமைப்பு முறையும்
* இதன் தலைநகர் வியன்டியான்.
* 19 மாகாணங்களாகவும் ஒவ்வொரு மாகாணமும் பல மாவட்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன.
* ஒரு கட்சி ஆட்சிமுறையில் உள்ள சோசலிச நாடு.
* மார்க்சிய – லெனினிய – சோசலிசக் கோட்பாடுகளை கொள்கையாகக் கொண்ட லாவோ மக்கள் புரட்சிக் கட்சியே இதன் ஆளும் கட்சியாகும்.
* இக்கட்சியின் பொதுச்செயலாளரே நாட்டின் மீவுயர் அதிகாரம் கொண்டவர்.
* அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் பணியாற்றுகிறார்.
* அரசாங்கக் கொள்கைகளை கட்சியின் 11 பேர் கொண்ட பொலிட்பீரோவும் 61 பேரைக் கொண்ட பொதுக்குழுவும் தீர்மானிக்கின்றன.
* தற்போதைய பொதுச்செயலாளர் தோங்லோன் சிசோலித் ஆவார்.
* தற்போதைய அரசாங்கத் தலைவர், பிரதமர் சோனெக்சே சிபாண்டோன் ஆவார்.
சிறப்பியல்புகளும் சுற்றுலாவும்
* சிறந்த சுற்றுலாத்தலங்களைக் கொண்ட நாடு.
* வணிகம் மற்றும் சுற்றுலாவுக் கான அய்ரோப்பிய கவுன்சில் இந்த நாட்டிற்கு 2013 ஆம் ஆண்டுக்கான வரலாறு மற்றும் கட்டடக் கலைக்கான, “உலகின் சிறந்த சுற்றுலாத் தலம்” என்னும் விருதை வழங்கியது.
* லுவாங் பிரபாங் மற்றும் வாட் பவு ஆகிய இரண்டு நகரங்களும் யுனெஸ் கோவால் அறிவிக்கப் பட்டுள்ள உலக பாரம்பரியத் தலங்கள்.
* ஏப்ரல் 13 – 15 தேதிகளில் கொண்டாடப் படும் லாவோ புத்தாண்டு தாய்லாந்து மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடு களைவிட, மிகவும் அடக்கமான நீர்த் திருவிழாவை உள்ளடக்கியது.