“பிஞ்சு பிடிச்சிருக்கு…”
நாங்க படிக்கிறதுல கஷ்டமான ‘சப்ஜெக்ட்’ கணக்குத் தான். அந்த கணக்கையும் ரொம்ப ஈஸியாப் படிக்கிற மாதிரி “கணக்கும் இனிக்கும்” என்ற தலைப்பில் பெரியார் பிஞ்சு மூலமா படிக்கிறோம். பெரியார் பிஞ்சுல எல்லாமே படிக்க ஆர்வமா இருக்கும். குறிப்பா இருந்த இடத்திலேயே, உலகத்தில இருக்கிற நிறைய நாடுகள் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். பெரியார் பிஞ்சு இதழில் வர்ற படக்கதை மூலமா நிறைய தலைவர்கள் பற்றியும் தெரிஞ்சுக்க முடியுது. எனக்கு “மன்னிச்சூ” அப்படிங்கற வார்த்தை ரொம்பப் பிடிக்கும். காரணம், தவறு செஞ்சா தயங்காம மன்னிப்புக் கேட்டு, அது சின்னத் தவறா இருந்தாக்கூட, அதைத் திருத்திக்கிற பழக்கத்தைக் கத்துக்க முடியுது. இன்னும் நிறைய நிறைய தெரிஞ்சுக்கணும்னா பெரியார் பிஞ்சு படிக்கலாம்… வாங்க.
– சே.மெ.கவிநிஷா, எட்டாம் வகுப்பு, ஆவடி, சென்னை – 71.