சிட்டுக் குருவி வந்தது
சின்னச்சிறகை விரித்து நன்றாய்
சிட்டுக் குருவி பறக்குது
கீச்சுக் கீச்செனத் சத்தமிட்டே
கிழக்கு நோக்கிச் செல்லுது!
பசுமை மிக்க வயல்வெளியைப்
பார்த்து இறங்கி வந்தது
பழுத்த நெல்லுக் கதிரினைப்
பற்றிக் கொறித்துத் தின்றது.
சுற்றுமுற்றும் பார்த்து அலகால்
வைக்கோல் கொஞ்சம் எடுத்தபின்
எங்கள் வீட்டில் நுழைந்தது
எளிதாய்க் கூட்டை அமைத்தது!
எட்டுத் திசையும் பறக்குமந்த
சிட்டுக் குருவி வந்ததால்
உள்ளம் மகிழ்ந்த அன்னை – குருவி
உண்ண நிறைய உணவிட்டார்
சிறுவர் நாங்கள் ரசிக்க – நாளும்
சிட்டுக் குருவி பாடுது
இனிமை நெஞ்சில் பரவுது
இதயம் நன்றி சொல்லுது!
– மு. நடராசன், புதுச்சேரி.