கணக்கும் இனிக்கும் : பொட்டுக்கடலையில் கணிதம்
உமாநாத் செல்வன்
‘செம போர் அடிக்குது… செல்போன் தாங்க’ன்னு செழியனும் லயாவும் வந்தாங்க. செழியன் கையில் பொட்டுக்கடலை டப்பா இருந்தது. “ரெண்டு பேரும் உட்காருங்க”ன்னு அமர வைத்தேன். ஆளுக்கு கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்தேன்.
1. “யாரிடம் நிறைய இருக்கு?’’ என்றேன். “எண்ணித்தான் சொல்ல முடியும்” என்றனர். “சரி. யாரிடம் எவ்வளவு இருக்கும்னு தோராயமா சொல்லுங்க’’ என்றேன். செழியன், ‘30’ என்றான் லயா ‘32’ என்றாள்.
2. “சரி, எண்ணுங்க” என்றேன். ஆளாளுக்கு எண்ணினார்கள். செழியனுக்கு வந்தது 43. லயாவிற்கு 51.
3. “நீங்க சொன்ன எண்ணிக்கை சரிதானா எனச் சரி பார்க்கவேண்டும். ஆனால் அனைத்தையும் எண்ண பொறுமையில்லை. சீக்கிரமா சரி பார்க்க முடியும்? அதனால அய்ந்து அய்ந்து பொட்டுக்கடலையாகப் பிரிச்சு வையுங்க.” “மீதம் வருமே” என்றார்கள். “ஆமா. அந்த மீதம் வந்தால் நான் எளிதாக உங்க எண்ணிக்கை சரியா தவறா என்று சொல்லிடுவேன்” என்றேன்.
செழியன் “அப்படி அய்ந்து அய்ந்தா அடுக்கி மீதம் 3 வந்துவிட்டது என்றான்.” லயா “1 வந்தது” என்றாள்.
4. “மீதமே இல்லாம பொட்டுக்கடலையைப் பிரிங்க” என்றேன். லயா கடகடவென இரண்டு இரண்டாகச் சேர்த்தாள். “மாமா ஒன்னு மீதி ஆகுது” என்றாள்.
5. “செழியனிடம் 4 கடன் கொடு” என்று கேட்டேன். வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன். “இப்ப எவ்வளவு இருக்கு?”
விரல்விட்டு எண்ணி “39” என்றான். “சரி இப்ப லயா அடுக்கினது போல க்ரூப் பண்ணு” என்றேன்.
6. “செழியா, அடுக்கி மீதி வருமான்னு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி கணக்குப் போட்டுப் பிரிச்சா நேரத்தைச் சேமிக்கலாம் இல்லையா?”
“ஆமாம்.” தாளில் இரண்டால் வகுத்தான். “அப்பா ஒன்னு மீதம் வருது.” “அப்படின்னா மூனு மூனாப் பிரிச்சுப்பாரு”
7. லயா, “மாமா 23 ‘க்ரூப்’ வந்திருக்கு, ரெண்டு ரெண்டா பிரிச்சிருக்கேன்” என்றாள்.
“இல்லையே கணக்கு உதைக்குதே! ஏதாச்சும் பொட்டுக் கடலையைச் சாப்பிட்டியா?”
“இல்லை மாமா.”
“சரி, 23 ஙீ 2 எவ்வளவு? நீ முதல்ல சொன்ன எண் எவ்வளவு…”
கொஞ்ச நேரம் கழித்து பென்சில் & தாளில் சரிபார்த்துவிட்டு, “ஆமாம் மாமா, 5 குறைஞ்சு இருக்கு” என்றாள்.
8. “சரி, நீங்க ரெண்டு பேரும் மாத்திக்கலாம், செய்துக்கலாம்; ஆனா பத்துப் பத்தா வைக்கணும்.”
ரெண்டு பேரும் பேசிகிட்டாங்க. “எனக்கு ஒன்று தந்தா எனக்கு பத்தில் வந்திடும்” என்றான். அட அவளுக்கு வந்துடுச்சு.
“மாமா தினமும் இப்படிச் செய்யுங்க” என்றாள்.
“சரி, இப்ப எண்கள் போட்டது எதுக்கு”ன்னு அத்தனை கணிதக் கூறுகளைக் கற்றுக்கிட்டாங்க, முயற்சி செய்தாங்க.
அதையும் விளக்கினேன்.
1. தோராயக் கணக்கு (Estimation)
2. ஒப்பீடு – அதிகம் – குறைவு
3. தொகுதியாகப் பிரித்தால் எண்ணுவது எளிது
(Grouping makes counting easier)
4. கழித்தல் (Subtraction) (43 – 4)
5. கூட்டல் (Addition.) Grouping 5 ஜ் 8 + 3
6. வகுத்தல் (Division)
7. பெருக்கல் (Multiplication)
8. குறைந்த வகுக்கும் எண்ணைக் கண்டு பிடித்தல் (Finding the least divisor)
9. Prime number (43இல் இருந்து 4 கடன் வாங்கினதற்குக் காரணம் அது பகா எண் என்பதால்). <