உலகு சூழ் ஆழி – மு.நீ.சிவராசன்
அட்லாண்டிக் பெருங்கடல்: அட்லாண்டிக் உலகின் இரண்டாவது பெருங்கடல் ஆகும். பூமியின் அய்ந்தில் ஒரு பகுதியில் பரந்து விரிந்துள்ளது. இப்பெருங்கடலின் மேற்கே வடஅமெரிக்கா – தென் அமெரிக்காவும், கிழக்கே அய்ரோப்பாவும், ஆப்ரிக்காவும் உள்ளன. வடக்கே, ஆர்க்டிக் பெருங்கடலும், தெற்கே அண்டார்டிகாவும் அமைந்து உள்ளன.
அட்லாண்டிக் ஓரத்தில் கிழக்கே பால்டிக் (Baltic), மத்திய தரைக்கடலும், மேற்கே கரீபியன் கடலும் உள்ளன.
இப்பெருங்கடலின் சில பகுதிகளில் மீன்கள் நிறைந்து நெருக்கமாக வாழ்கின்றன. ஆனால், உலகிலேயே இக்கடல் பகுதிதான் மாசுபட்ட பகுதி.
ஏனெனில், இப்பெருங்கடலைச் சுற்றி கடற்கரைகளில் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கின்றன.
அட்லாண்டிக் சில உண்மைகள்:-
பரப்பு – 824420002 கி.மீ.
சராசரி ஆழம் – 3660 மீ (12,000 அடி) பியூட்ரோ ரிக்கோ பள்ளம் (Puetro Rico Trench).
நீளம் – 16,000 கி.மீ. (9,900 மைல்)
அதிக அகலம் – 8,000 கி.மீ. (4,900 மைல்)
இயற்கைக் கூறுகள்:
அட்லாண்டிக் பெருங்கடல் வெப்பமான (300 C) அலைகள் நிறைந்த, அமைதியற்ற பெருங்கடல்.
அட்லாண்டிக் கரைமேடு:-
இப்பெருங்கடலின் நடுவே நீண்ட, ஒடுக்கமான கரை உண்டு. அதன் உயரமான பகுதிகளில் பல தீவுகள் உண்டு. கரைகளில் பல எரிமலைகளும் உண்டு.
அய்ஸ்லாந்து (Iceland)
இந்தக் கரையின் வடக்குப் பகுதியில் அய்ரோப்பாவிற்கும், வடஅமெரிக்காவிற்கும் இடையில் உள்ளது இந்தத் தீவு. இது 1944 – இல் இருந்து குடியரசாக உள்ளது.
வளைகுடா நீரோட்டத்தால் இத்தீவின் தென் பகுதி மிதமான வானிலையோடும், வடக்குப் பகுதி மிகக் குளிராகவும் இருக்கும். இங்குள்ள மக்கள் வளமை மிக்க கடற்கரையில் வாழ்கின்றனர்.
அவர்களின் முக்கியமான வேலை ஆடு வளர்த்தலும், பண்ணைத் தொழிலும் ஆகும்.
ஒரு விழுக்காடு நிலத்தில்தான் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. பாறைகள் மிகுந்த நடுப் பகுதியில் மக்கள் வாழ்வதில்லை.
தெற்குப் பகுதியில் பல நதிகளும், ஏரிகளும், அழகான நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.
நீல நீர் ஏரி (Blue Lagoon)
ஆண்டுதோறும் மக்கள் இங்குவந்து நீந்துவதில் இன்பம் காணுகின்றனர். இதன் தலைநகரம் ரேக்ஜவிக் (Reykjavik). இது ஒன்றே பெரிய பட்டணம்.
இங்கு ஒரு பல்கலைக்கழகம் உண்டு. அனைவரும் எழுத்தறிவு உடையவர்கள். ஏற்றுமதி – மீன்.
முதன் முதலில் கி.பி. 874 இல் நார்வேயிலிருந்து வந்த அரசியல் அகதிகள் குடியேறினார்கள். சமயம் கிறித்துவம்.
அய்ஸ்லாந்து மொழி:-
இதுவே உலகத்தின் வடகோடியில் பயிலப்படும் நாகரிக மொழி. இம்மொழி கேட்க இனியதாய் இருக்கும். இந்நாட்டுப் பாடல்கள் புகழ்பெற்றவை. 80 விழுக்காடு மக்களுக்குச் சொந்த வீடு உண்டு. அனைவரும் செல்வந்தர்கள்.
கேப் வெர்டி முனைத் தீவு:- (Cape Verde)
ஆப்ரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பக்கமாக உள்ள தீவுகள். வளப்பமற்ற மண், தூய்மையான நீருக்குப் பஞ்சம்.
தலைநகரம் – பிரையா (Praiya)
மக்கள்தொகை – 43,07,000
மொழி – போர்ச்சுகீசியம்
சமயம் – கிறித்துவம்
அட்லாண்டிக் பெருங்கடலில் அட்லாண்டிக் தீவுக் கூட்டங்கள்:- இப்பெருங்கடலில் மேலும் பல தீவுகள் உண்டு. அவை அசோரஸ் (Azores) கானரிஸ்(Canaries), அசென்சன் (Aseension), பெர்முடா (permuda), செயிண்ட் எலீனா (St. Helena) ஆகியவை ஆகும்.
இவைகளில் கானரிஸ் (Canaries), பெரும்பாலான தீவுக் கூட்டங்கள் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன.