மடல்கள்
பிஞ்சு திங்களிதழ் திகட்டா இன்பம். பகுத்தறிவுடன் கூடிய பற்பல செய்திகளை அள்ளித் தருகின்ற அறிவுப் பெட்டகம். பிஞ்சு மனதுகளில் நஞ்சாய் இருக்கும் மூடக் கழிவுகளை அகற்றும் ஆசான்.
வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு, வளமான வாழ்க்கை நெறிமுறைகளை வகுக்கும் வழிகாட்டி. அறிவியல் சிந்தனையோடு அகம் மகிழச் செய்கின்றது.
பெரியார் பிஞ்சு இதழ் சிறுவர்களுக்கு மட்டுமல்ல. இளைஞர்கள், பெரியவர்கள், அனைவரும் படிக்கக்கூடிய பெரியார் பழம் அது. அனைத்து அம்சங்களையும் தாங்கி வரும் அற்புதமான இதழ் பெரியார் பிஞ்சு நெஞ்சில் நிற்கும் இதழ்!
– பஞ்ச் தர்மா, வெள்ளாளப்பட்டி.
விருதுநகர் ஒன்றிய எட்டநாயக்கன் பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு பெரியார் பிஞ்சு இதழ் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்குத் தேவையான பயனுள்ள பல செய்திகளைத் தாங்கிவருகிறது. பிஞ்சுகள் வாங்கிப் படிக்க வேண்டிய இதழ் என்று கூறியதும், தாங்கள் ஆர்வமுடன் பெரியார் பிஞ்சு படித்து வருவதாகக் கூறினர் பிஞ்சுகள்.
– சு. சண்முகசுந்தரம்,பட்டம்புதூர், விருதுநகர் மாவட்டம்.
ஜூலை 2011 பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்துள்ள ஜோதிட நம்பிக்கையே சுத்த நாத்திகம் என்ற 2- பக்கக் கட்டுரை மிகமிக அருமை. புதிய கோணத்தில் கடவுள் – ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல் இவற்றைக் கூர்ந்து பார்த்து ஒப்பிட்டிருக்கும் சிகரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த இரண்டு பக்கங்களையும் நகல் எடுத்து நண்பர்கள் பலருக்கும் கொடுத்து வருகிறேன்.
மேலும், சிகரம் அவர்கள் வாதிட்டதில் ஒரு கருத்தை மட்டுமே கூறியுள்ளார். மற்ற கருத்துகள் பற்றியும் எழுதினால் மக்களுக்குப் பெரிதும் பயன்படும்.
நன்றி!
– பொன். இராமச்சந்திரன்
பெரியார் பிஞ்சு 7/2011 படித்தேன்.
வாஸ்து பார்த்துத்தான் இல்லம் கட்டுகிறான். பின் வாஸ்து சரி இல்லை என்கிறான். அப்ப முதலில் பார்த்த வாஸ்து வஸ்து சரியில்லை தானே!
தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிட இத்தனை காலம் ஆகி இருக்கிறது. தமிழ் வாழ்க!
ஆர்க்டிக் பெருங்கடல் உலகில் உள்ள மிகக் குளிர் நிறைந்த இடங்களில் ஒன்று.
உலகில் உள்ள பெருங்கடல்களில் சிறிய, ஆழம் குறைவான பெருங்கடல் இது.
கிரீன்லாந்து உலகிலேயே மிகப் பெரிய தீவு.
தமிழ்ப் பெயரைத் தாராளமாக வைத்திட்டால் என்ன?
– க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி.