உலகநாடுகள் – சா டோம் மற்றும் பிரின்சிப்
(சா டோம் மற்றும் பிரின்சிப்) Democrative Rebublic of Sao Tome & principe
- ஆப்ரிக்கக் கண்டத்தின் நாடுகளுள் இரண்டாவது சிறிய நாடு.
- அலுவலக மொழி: போர்ச்சுகீசியம் (Portuguese). ஃபோரோ (Forro).
அங்கோலர் (Angolar), பிரின்சிபென்ஸ் (principense) மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளாக உள்ளன. - குடியரசுத் தலைவர்: ஃப்ராடிகுயு டி மெனசெஸ் (Fradigue de menezes)
- பிரதமர்: பாட்ரிசி ட்ரோவோயடா (Patrice Trovoada)
- நாணயம் டோப்ரா (Dobra)
- அற்புதமான இயற்கை அதிசயமாக பைக்கோ கயோ கிராண்டி (pico cao crande) உள்ளது.
போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு சா டோம் மற்றும் பிரின்சிப் தீவுகள் குடியேற்றமில்லாது இருந்துள்ளன. ஜோவா டி சான்டரெம் (Joao de santarem) மற்றும் பெட்ரோ எஸ்கோபர் (Pedro Escober) என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக பெயர்கள் காணப்படுகின்றன. போர்த்துகீசிய கடல்திசைகாட்டிகளால் இந்தத் தீவுகள் ஆராயப்பட்டு நிலப்பகுதியிலுள்ள வர்த்தகத் தளங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தீவுகள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பிரின்சிப் ஆரம்பத்தில் Santo Antao (Saint Antony) என்று இருந்துள்ளது. 1502இல் பிரின்சிப் Prince’s Island என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
சர்க்கரை சாகுபடி மிகவும் நல்ல நிலையில் இருந்துள்ளது. எனவே, போர்த்துகீசியர் நிறைய அடிமைகளை வரவழைத்து உற்பத்தி செய்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் காபி, கோகோ பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வளமையான எரிமலை மண் விளைச்சலுக்கு ஏற்றதாக இருந்துள்ளது. 1908இல் சாவோ டாம் கோகோ உற்பத்தியில் புகழ் பெற்றிருந்தது.
20ஆம் நூற்றாண்டில் உரிமைகளுக்காக போர்த்துகீசியரை எதிர்த்து ஆப்பிரிக்கர்கள் போர் தொடுத்தனர். ஆட்சியாளர்களால் பலர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு காலனித்துவ வரலாற்றில் படெபா படுகொலை என்றழைக்கப்படுகிறது.
1950இன் இறுதியில் ஆப்ரிக்கக் கண்ட நாடுகள் சுதந்திரம் கேட்டபோது இவர்களும் கேட்டனர். Movement for the Liberation of Sao Tome and Principe (MLSTP) என்ற பெயரில் குழு அமைத்துப் போராடினர். 1974இல் கிளர்ச்சி பரவி 1975 ஜூலை 12 அன்று சுதந்திரம் பெற்றனர்.
புவியியல் அமைப்பு
சாவோ டோம் மற்றும் பிரின்சிப் ஆகிய 2 தீவுகளும் இவற்றின் அருகேயுள்ள இன்னும் சில தீவுகளையும் உள்ளடக்கி அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள கினியா (Guinea) வளைகுடாவில் அமைந்துள்ளன. இதன் தெற்கே நிலநடுக்கோடு செல்கிறது.
அரசியலமைப்பு
1990 வரை பல கட்சி அமைப்பாக இருந்தது. பிரதமர் அதிபர் என அழைக்கப்படுகிறார். நாட்டின் உயர்ந்த அமைப்பு தேசிய சபையாகும். இது, 55 உறுப்பினர்களைக் கொண்டது.
நீதித்துறை அரசியல் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது. நீதி நிருவாகத்தின் உயர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளது. பேச்சுச் சுதந்திரம், எதிர்க்கட்சி அரசியல் சுதந்திரம் உள்ளது.
கல்வி
கட்டாயக் கல்வி 4 ஆண்டுகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர் இல்லாமை, புத்தகங்கள், போதிய வகுப்பறை வசதியின்மை ஆகியன நிலவுகின்றன. வெளிநாட்டு நிதியை நம்பும் நிலையில் உள்ளது.
பண்பாடு
போர்த்துகீசிய-, ஆப்ரிக்கக் கலைகள் கலந்து காணப்படுகின்றன. சாவோ டோமின் Ussua and Socope இசையும், போர்த்துகீசிய Ballroom நடனமும் புகழ்பெற்றவை.
Tchiloli என்பது இசை, நடன நிகழ்ச்சியாகும். Danco-Congo என்பது இசை, நடனம், நாடகம் மூன்றும் சேர்ந்ததாகும்.