பிஞ்சுகள் பக்கம்
பூஞ்சை
பூஞ்சை என்பது வேர், தண்டு, இலை பூக்கள் முதலியவை இல்லாத _ குளோரோஃபில் இல்லாத தாவர இனம். உணவைத் தாமாகவே தயார் செய்ய இயலாத இவை ஈஸ்ட், பூஞ்சைக்காளான், நாய்குடைக்காளான் முதலியன உள்ளடங்கியது. இதன்வகைகள் சுமார் 80,000 இருக்கும். பொதுவாக அறியப்படும் பூஞ்சை நாய்க்குடைக்காளான் ஆகும். காய்கறியாக உபயோகிக்கப்படும் பூஞ்சை குடைக்காளானில் ஒரு வகை ஆகும்.
பூஞ்சையில் சேமித்திருக்கும் உணவுப் பொருள்கள் கோஜென் மற்றும் எண்ணெய் குளோப்யூல்கள் ஆகியனவாகும். பென்சிலியம் நோட்டேட்டம் என்ற ஃபங்கஸிலிருந்து மருந்து தயாரிப்பதைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளெமிங். பூஞ்சைகள் உயிரற்ற அழுகும் கரிமப்பொருள்களில் ஸாப்ரோப்களாகவும், உயிரினங்களில் ஒட்டுண்ணிகளாகவும் வாழும்.
மிகவும் விஷத்தன்மையுடைய பூஞ்சை அமோனியா என்ற காளான் வகைகள் ஆகும். உணவுக்குப் பயன்படுபவை அகாரிகஸ் என்ற வகை காளான் ஆகும். காளான்களில் இனப்பெருக்கம் என்பது ஸ்போராஞ்சியாவால் இனச்சேர்க்கை இல்லாது நடக்கின்றது. ஹெட்டோட்ரோஃப் என்றால் மற்ற உயிரினங்கள் தயார் செய்யும் உணவை உட்கொள்ளும் வகை ஆகும். செல்சுவர் அமைக்கப்பட்டிருக்கும் பொருளின் பெயர் ஃபங்கல் செலுலோஸ் மற்றும் சிற்றினம் எனப்படும். பூஞ்சையின் வகை பிரிப்பு அவைகளில் அமைந்திருக்கும் வாழ்க்கைச்சூழல் அடிப்படை யில் வருகிறது. அஸ்கோமைசைட்கள் என்பவை ஈஸ்ட், பூஞ்சைக்காளான் முதலியவை அடங்கிய வகை ஆகும். எத்தனால் உற்பத்தியில் ஆல்கஹால் ஸாக்கரோமைஸஸ் செரிவிசியே என்னும் பூஞ்சை உபயோகிக்கப்படுகிறது. செப்ற்றல் ஸ்போர்ஸ் பூஞ்சையில் இருக்கும்.
சு.கோபி, 10ஆம் வகுப்பு அ பிரிவு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை
முடிந்தவரை போராடு
காலையில் பூத்து
மாலையில் மரணமாகப் போகும்
பூக்களைப் பாருங்கள்
புன்னகை செய்வதை!
விடிவதற்குள்
விலாசம் இல்லாமல் போய்விடும்
விட்டில் பூச்சிகளைப் பாருங்கள்
விளக்கோடு விளையாடுவதை!
மனிதனே!
நீ மட்டும் ஏன் தோல்விகளைக் கண்டு அஞ்சுகிறாய்?
முடிந்தவரை போராடு உன் சாவுகூட ஒரு சரித்திரமாய் அமையட்டும்
– மு.ஹ. முஹம்மது அபூபக்கர்
காயல்பட்டினம்
தமிழ்!
நான் பிறக்கும் முன் தோன்றிய ஒன்று
நான் இறந்த பின்னும் வாழக்கூடிய ஒன்று
கூகுளிலும் வந்துவிட்டது
ஆர்குட்டிலும் நுழைந்துவிட்டது
என் கைபேசியில் பதிந்துவிட்டது
– ம.யுவன் குமார், செங்கல்பட்டு