விடுகதை
1. கன்னங்கரேல் என்று இருக்கும், காரிருள் அல்ல. கானம் பாடித் திரியும், வானம்பாடி அல்ல -அது என்ன?
2. நூல் நூற்கும், ராட்டை அல்ல. ஆடை நெய்யும், தறி அல்ல – அது என்ன?
3. இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?
4. தண்ணீரில் நீந்தி வரும் தரையில் தாவி வரும் – அது என்ன?
5. போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்?
6. செய்வதைத் திருப்பிச் செய்யும், குரங்கும் அல்ல! சிங்காரிக்க உதவும், சீப்பும் அல்ல? அது என்ன?
7. தண்ணீரில் மிதக்கும், கப்பல் அல்ல? கனமாக இருக்கும், கல்லுமல்ல! வெயிலில் உருகும், வெண்ணெயும் அல்ல! அது என்ன?
8. வளர வளர வெட்டுவார்கள், தலைமுடி அல்ல! வெட்ட வெட்ட வளருவேன், வாழையும் அல்ல! நான் யார்?
9. ஓடையில் ஓடாத நீர்! ஒருவரும் குடிக்காத நீர்! அது என்ன?
10. ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் விழுந்தாலும் நனைவதில்லை! அது என்ன?