உலகைச் சுற்றிவரும் சூரியப் படகு
நீங்கள் படத்தில் காண்பது சூரிய சக்தியிலேயே முழுமையாக இயங்கும் உலகின் மிகப்பெரிய படகு. சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக் கப்பட்ட இந்தப் படகு உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறதாம்.
102 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட இந்தப் படகில் மூன்று நாட்கள் தொடர்ந்து சூரிய ஒளி இல்லாவிட்டாலும் கூட பயணம் மேற்கொள்ளமுடியுமாம். அந்த அளவுக்கு சூரிய ஆற்றலைச் சேமிக்கும் லித்தியம் மின்கலம் இதில் உள்ளது. டுரானர் சோலார் பிளானட் எனப் பெயரிடப்பட்டுள்ள இது, தனது பயணத்தை மொனாக்கோவிலிருந்து தொடங்கியது.