எப்படி? எப்படி?
தங்கம் எவ்வாறு வெட்டியெடுக்கப்படுகிறது?
– எம்.இனிதா, களியக்காவிளை
பூமிக்கு அடியில் பாறைகளுக்கு இடையேயும் குவார்ட்ஸ் போன்ற கனிமப் பொருள்களிலும் மணல் மற்றும் மண்ணிலும் கலந்து தங்கம் காணப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தங்கம் பெருமளவில் கிடைக்கிறது. தனி உலோகமாகவும் டெல்லுரைடு முதலிய உலோகக் கலவையால் குளோரைடு போன்ற சேர்மமாகவும் தங்கம் பூமிக்கடியில் கிடைக்கிறது.
இந்தக் கனிமப் பொருள்களை தங்கச் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்து பல இயற்பியல் வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி தங்கத்தைப் பிரித்தெடுக்கிறார்கள்.
– முகில் அக்கா