கலைஞர் தாத்தா
பெரியாரின் வழிநின்றார்
கலைஞர் தாத்தா
பேரறிஞர் நெறி சென்றார்
கலைஞர் தாத்தா
நரியாரின் விசமுறிக்க
கலைஞர் தாத்தா
நாத்திகராய் எல்லாமும்
நாளும் செய்தார்
வகுப்புரிமைக் கொள்கைதான்
அவரின் மூச்சு
வண்டமிழை வளர்த்திடுமே
அவரின் பேச்சு
பகுத்தறிவு வசனங்கள்
எழுதி நாட்டை
பண்படுத்த உழைத்தவர் நம்
கலைஞர் தாத்தா
பள்ளியிலே சத்துணவில்
முட்டை சேர்க்க
பரிந்தே தான் ஆணையிட்டார்
கலைஞர் தாத்தா
கல்லூரி பலதிறந்து
உயர்கல்விக்குக்
கட்டமைப்புச் செய்தவர்தான்
கலைஞர் தாத்தா
– டாக்டர் பெரு. மதியழகன்