கதை கேளு கணக்குப் போடு
அகில், முகில் இருவரும் சகோதரர்கள். ஒரே பள்ளியில் படிப்பவர்கள். பள்ளியிலிருந்து ஒரு நாள் கல்விச் சுற்றுலாவாக அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
இருவரும் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவர்களது அப்பா இருவருக்கும் தனித்தனியாக 100 ரூபாய் செலவிற்கு வைத்துக் கொள்ளும்படிக் கொடுத்தார்.
மாலையில் வீட்டிற்கு வந்ததும் அவர்களது பாட்டி, அப்பா கொடுத்த பணத்தில் ஏதேனும் மீதி வைத்துள்ளீர்களா அல்லது அனைத்தையும் செலவு செய்துவிட்டீர்களா என்றார்.
இதனைக் கேட்ட முகில், பாட்டி அனைத்துப் பணத்தையும் செலவு செய்யவில்லை.
எங்களுக்குத் தேவையான உணவினை வாங்கிச் சாப்பிட்டோம். வெளியில் சிறுவர்களுக்கான புத்தகம் கிடைத்தது. அதையும் வாங்கியுள்ளோம் என்று சொல்லியபோது குறுக்கிட்ட பாட்டி, அதுசரி மீதி எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள் என்றார்.
உடனே அகில், பாட்டி என்னிடமிருக்கும் பணத்தையும் தம்பியிடமிருக்கும் பணத்தையும் பெருக்கினால் 192 வரும் என்றான். இதனைக் கேட்ட முகில், பாட்டி நானும் ஒரு குறிப்புத் தருகிறேன்.
என்னிடமிருக்கும் பணத்தின் 2 அடுக்கையும் அண்ணனிடமிருக்கும் பணத்தின் 2 அடுக்கையும் பெருக்கினால் 400 வரும்.
நீங்கள்தான் வாய்க்கணக்குப் போடுவதில் திறமையானவர் ஆயிற்றே! கண்டுபிடியுங்கள் பாட்டி என்றனர்.
– நீங்களும் கண்டுபிடியுங்கள்.