சப்பாத்தி மீன்
நீங்கள் படத்தில் பார்ப்பது சப்பாத்தி மீன். இதன் சிறப்பு என்னவென்றால், இதன் உடம்பில் கிரிப் உள்ளதால் எளிதில் ஒட்டிக் கொள்ளும். நமது உடம்பில் மட்டுமல்ல; எந்தப் பொருளிலும் ஒட்டிக் கொள்ளும் தன்மை உடையது.
இந்த மீன் சரியான சோம்பேறி மீன் போல! நீந்தும் போது தனியாக நீந்தாது. நீந்துவதற்கு எரிச்சல் பட்டு கடலில் நீந்தும் மற்ற பெரிய பெரிய மீன்களின் மீது சவாரி செய்யும்.உடம்பில் கிரிப் உள்ளதால் எளிதில் மற்ற மீன்களின் மீது ஒட்டிக்கொண்டு அது இறங்கும் இடம் வந்தவுடன் கிரிப்பை தட்டி விட்டு இறங்கி விடும். இந்த மீனைப் பெரும்பாலான மீனவர்கள் யாரும் சாப்பிடமாட்டார்களாம்.
– த. மரகதமணி