துணுக்குச் சீட்டு – 10 : பிரியாணி ரொம்ப சாப்பிடுவீங்களா?
நல்லா வெளிய அங்க இங்கன்னு போய்ட்டு, ஒரு பிரியாணிக் கடையைப் பார்த்ததும், நாக்கு, வயிறு, மூளை, மனசுன்னு எல்லாமே, நம்ம கால்களை, அந்தக் கடையை நோக்கி நடக்கச் சொல்லும். ஓர் அருமையான பிரியாணிக்கு அப்புறம், அந்த இனிப்புச் சோம்பை வாயில போடும்போது, “வேற எதுவும் தேவை இல்லை”ன்னு ஙிநிவி லாம் போடத் தோணும். இது எப்பாவாச்சும்னா சரி, ஆனால், ஏன், தினமும் பிரியாணி சாப்பிடக்கூடாது? என்று நினைக்கலாம்.
பிரியாணியில ருசியோட சேர்த்து, மருத்துவ குணம் வாய்ந்த பொருள்கள் அதிகம். மஞ்சள், சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் மாதிரி பல மசாலாப் (Masala) பொருள்களைச் சேர்க்கிறோம். இது எல்லாமே மருந்துப் பொருள்கள்தாம். வயிறு செரிமானத்துக்கும், நச்சுக்கிருமிகளை எதிர்க்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் இந்தச் செலவுப் பொருள்கள் உதவுது. அதோட, பிரியாணியில் இருக்கும் மாமிசத்தால், நமக்குப் புரதச் சத்தும் கிடைக்குது. இவ்வளவு நல்லது இருந்தாலும், இதைத் தினமும் சாப்பிடுவது நல்லது இல்லை.
உடல் உறுப்புகள் எல்லாம் வேலை செய்ய அதுக்குச் சக்தி தேவை. அதை உணவுல இருந்துதான் நம்ம உடம்பு எடுத்துக்குது. இப்படி உணவில் இருந்து எடுக்குற எரிசக்தியை, கலோரி எனும் அளவுகோலைப் பயன்படுத்திச் சொல்லுவோம். சராசரியா ஒரு பெண்ணுக்கு, ஒரு நாளைக்கு 2000 கலோரிகளும், ஓர் ஆணுக்கு, 2500 கலோரிகளும் தேவைப்படும். ஒரு கப் பிரியாணியில், அதில் சேர்க்கப்படும் மாமிசத்தைப் பொருத்து, 200 – 320 கலோரிகளும் 30 – 52% வரை கொழுப்பும் இருக்கு. அதோடு ஊருக்கு ஊர் பிரியாணியின் செய்முறை வேறுபடும். அதுபோலவே, கலோரியின் அளவும், சோடியம், கொழுப்புப் போன்றவற்கீகீறின் அளவுகளும் வேறுபடும்.
அதிக அளவு கலோரி மற்றும் சோடியத்தின் அளவினால், உடல் எடை கூடும். இதய நோய் வரவும் வாய்ப்புகள் அதிகமாகுது. சோடியத்தின் அளவினால், இரத்தக் கொதிப்பு அதிகமாகுது. பிரியாணியில் என்று இல்லை, எந்த உணவுன்னாலும், அதையே தினசரி சாப்பிட்டா, அந்தச் சாப்பாட்டுல இருக்கும் சத்து மட்டும் தான் உடம்புக்குக் கிடைக்கும். மற்ற சத்துகள் கிடைக்காததால், சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கு. நம் உடல்நிலையை அறிந்து கொண்டு நாள்தோறும் மாமிசம் உண்ணுவதால் கூட உடல் கூடாது. ஆனால், அதனுடன் அதிக அளவுசேரும் கார்போ ஹைட்ரேட்டான சோற்றில் பிரச்சினை இருக்கிறது. உடல் எடைகூடும் இதனால்தான் பிரியாணியை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்பாவாச்சும் சாப்பிடலாம். அதுலயும் வீட்டுல பாசம் நேசம் லாம் கொஞ்சம் அதிகமாப் போட்டு சமைக்குற பிரியாணின்னா, இன்னும் சிறப்பு.
அப்புறம், பிரியாணி இந்தியாவில கண்டுபிடிச்ச உணவு இல்ல. ஈரான் நாட்டுப் பயணிகளால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட உணவாகும். பயணத்தால, ஓர் அருமையான உணவு கிடைச்சிருக்கு அல்லவா! அந்தப் பயணிகளுக்கு நன்றி!! வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாமும் பயணிச்சி, பல செய்திகளையும் பல்வேறு கலாச்சாரங்களையும் தெரிந்துகொள்ளலாமா? அப்படி உங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன், பிளீச்ச்!!<