உலகு சூழ் ஆழி – 7
– மு.நீ. சிவராசன்
பசிபிக் பெருங்கடல் – III
தென்மேற்கு பசிபிக்:–
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவுகள் மைக்ரோனேஷியா (Micronesia), மெலேனேஷியா (Melanesia) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவைகளில் பாப்புவா நியூகினி (Papua New Guinea) மக்கள், சிற்றூர்களில் வாழ்கின்றனர்.
தங்கள் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள், தென்னை – பொருட்கள், வாழை, கோ கோ கொட்டைகள், கரும்பு _ சர்க்கரை.
பாப்புவா நியூ கினி:
தலைநகரம் – மோர்ஸ்பி துறைமுகம் (Port Moresby)
பரப்பு – 4,62,840 ச.கி.மீ.
மக்கள் தொகை – 52 இலட்சம்
மொழிகள் – ஆங்கிலம், பாப்புவன் (Papuan) 750 உள்நாட்டு மொழிகள்.
மதம் – கிறித்தவம், மரபு வழி நம்பிக்கைகள்
நாணயம் – கினா (Kina)
பாப்புவா கினியில் உயரமான மலைகளும், அவைகளைப் பிரிக்கும் சதுப்புநில நதிப் பள்ளத்தாக்குகளும், அவைகளைச் சுற்றி வெப்ப மண்டலக் காடுகளும் உள்ளன.
பாப்புவாவில் உள்ள சில மலைகள், எரிமலை மலைகள். அவைகளில் சில எப்பொழுது வேண்டுமானாலும் எரிமலைக் குழம்பை வெளிவீசும்.
தென்னை:-
இங்கும் தென்னை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளருகின்றது. பெரும்பாலும் இத்தீவுக் கூட்டங்கள் ஆண்டு முழுவதும் வெப்பம் நிறைந்த வானிலையைக் கொண்டுள்ளன. இங்கு பெரிய அளவில் தங்கச் சுரங்கங்களும், இயற்கை எரிவாயுவும் கிடைக்கின்றன. இங்கு செம்பும் வெட்டி எடுக்கப்படுகின்றது.
மைக்ரோனேஷியா (Micronesia) :
தலைநகரம் – பலிக்கிர் (Palikir)
பரப்பு – 702 ச.கி.மீ.
மக்கள் தொகை – ஒரு லட்சத்து முப்பதாயிரம்
மொழி – ஆங்கிலம், துருக்கி
மதம் – கிறித்தவம்
நாணயம் – அமெரிக்க டாலர்
இக்கூட்டாட்சியில் 600 தீவுகளுக்கு மேல் உள்ளன.
அவை, இப்பெருங்கடலில் 2,900 கிலோமீட்டர் அளவுக்குப் பரந்துபட்டுள்ளன. அவைகளுள் சில மலைப்பாங்கானவை. மற்றும் சில அடர்ந்த காடுகளும், எரிமலையும் நிரம்பியவை.
பெரும்பாலான தீவுகளில் மின்சாரம் இல்லை. ஓடும் தண்ணீரும் இல்லை. தென்னைக் கொப்பரையிலிருந்தும், மீனிலிருந்துமே பெரும்பாலான வருமானம் வருகின்றது.
பலாவ் (Palau):
இப்பகுதி மேற்கு பசிபிக்கில் சுமார் 300 தீவுகளுக்கு மேல் உள்ளது. இவற்றில் 9 தீவுகளிலேயே மக்கள் வாழ்கின்றனர். இங்கு சமூகத்தில் ஒரு குலத்தின் தலைவனைப் பெண்கள் தேர்ந்தெடுப்பது வியப்பளிக்கிறது. இங்கு மக்கள் தொகை – 19,100. இதன் தலைநகரம் கோரர் (Koror).
மார்ஷல் தீவுகள் (Marshall Island):
அய்ந்து தீவுகளைக் கொண்ட இப்பகுதி 1990- இல் விடுதலை அடைந்தது.
இவைகளைச் சுற்றி 1,150 சிறு தீவுகளும், 29 வட்டப் பவளத் திட்டுகளும் உள்ளன.
மக்கள் தென்னைப் பொருட்கள் மற்றும் மீன்களை விற்றே வாழ்க்கை நடத்துகின்றனர்.
இதன் தலைநகரம் மஜூரோ (Majuro). பரப்பு – 181 ச.கி.மீட்டர்.
இங்கு 68,100 மக்கள் வாழ்கின்றனர். ஆங்கிலம், மார்ஷலீஸ் இங்கு பேசப்படும் மொழிகளாகும்.
பெரும்பாலானவர், கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள்.
சாலோமன் தீவுகள் (Solomon Islands) :
இதன் தலைநகரம் ஹொனியாரா (Honiara).
பரப்பு – 28,450 ச.கி.மீட்டர்
மக்கள் தொகை – 4,63,000
மொழி – ஆங்கிலம்
மதம் – கிறித்துவம்
நாணயம் – சாலமன் டாலர்
இத்தீவுகளில் இரண்டாம் உலகப் போர் நடந்தது. 1978 வரை இத்தீவுகள் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தன. இதில் 6 பெரிய தீவுகளும், நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளும், பவளப்பாறைகளும் உள்ளன.
ஃபிஜி (Fiji):
இரண்டு பெரிய தீவுகள் அடங்கிய பகுதி இது.
மலைகளும், எரிமலைகளும் நிரம்பியவை.
தலைநகரம் – சுவா (ஷிஸ்ணீ)
பரப்பு – 18,270 ச. கிலோ மீட்டர். மக்கள் தொகை _ 8,25,000
மொழி – ஆங்கிலம், ஃபிஜியன்
மதம் – கிறித்தவம், இந்து, முஸ்லிம்
நாணயம் – ஃபிஜியன் டாலர்
பெரும்பாலான ஃபிஜி மக்கள், கிராமங்களில் வாழ்கின்றனர். கரும்பு விளைவித்தல் பெரும்பாலானோரின் தொழிலாகும். ஃபிஜியின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பகுதி சர்க்கரையே.