எப்படி? எப்படி?
சூரியகாந்திப் பூ காலை, மாலை வேளைகளில் திசை திரும்புவது ஏன்?
– இலக்கியா, சாத்தான்குளம்
தாவரங்கள் பொதுவாக சூரிய ஒளியை நோக்கியே வளர்ந்து செல்கின்றன. சூரியகாந்திப் பூவும் சூரிய ஒளியை நோக்கித் திசை திரும்புகிறது. இந்த இயக்கத்திற்கு ஒளி நாட்டம் (Photodropism) என்று பெயர். இதுபோன்ற இயக்கமுள்ள செடிகளுக்கு சூரிய ஒளி உணர்வு அவசியம். சூரியகாந்திப் பூ இந்த ஒளி உணர்வின் மூலமாகவே திசை திரும்புகிறது.
– முகில் அக்கா