அறிவியல் சோதனை
காலவனா மீட்டர் செய்வோமா?
காப்பிட்ட கம்பியைப் பலமுறை தொடர்ந்து தீப்பெட்டியின் மேல் சுற்றுங்கள். அதன் ஒரு நுனியை புதிய மின்கலத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள். தீப்பெட்டியின் நடுவிலிருந்து நூலைக் கட்டி சிறு ஊசியைத் தொங்க விடுங்கள். ஊசியான பெட்டியின் ஓரங்களைத் தொடாது இருக்கட்டும். காப்பிட்ட கம்பியின் மறுமுனையை மின்கலத்தின் மறுபகுதியில் இணையுங்கள். தொட்டவுடன் தீப்பெட்டியின் உள்ளே தொங்கும் ஊசி துடித்து அரை வட்டமாக திரும்புவதைப் பாருங்கள்.
தேவையான பொருள்கள்
1. காலித் தீப்பெட்டி மூடி மட்டும்
2. காப்பிட்ட கம்பி
3. நூல்
4. தையல் ஊசி
5. மின்கலம்
(புதியது-1, பழையது-1)
இப்பொழுது ஒரு பழைய மின்கலத்துடன் அதை இணையுங்கள். மின்கலத்தில் மிதமான மின்சாரம் இருக்குமானால் ஊசி லேசாகத் திரும்பும். மின்கலத்தில் மின்சாரமே இல்லை என்றால் ஊசி திரும்பாது. மின் சக்தியை அளப்பதற்காகப் பயன்படும் கால்வனா மீட்டர் இதன் அடிப்படையில்தான் இயங்குகிறது. கால்வாணி என்ற அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு இது.
எப்படி?
கம்பிச்சுருள் மின் ஓட்டத்தினால் தற்காலிகமாக காந்தம் உண்டாகிறது. அப்போது ஊசி காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது, ஊசி திரும்புகிறது.
– அணு கலைமகள், சிவகங்கை