கதை கேளு கணக்குப் போடு
அன்பரசி, எழிலரசி, தமிழரசி மூவரும் சகோதரிகள். ஞாயிற்றுக் கிழமை என்பதால் அருகிலுள்ள தோழிகளின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். சந்தைக்குச் சென்ற அவர்களது அப்பாவும் அம்மாவும் ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்தனர். குழந்தைகள் வெளியில் சென்றிருந்ததால் கூடத்திலிருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவசர வேலை காரணமாக மீண்டும் வெளியில் சென்றுவிட்டனர்.
அன்பரசி தோழியுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் மேஜையில் இருந்த பழங்களைப் பார்த்தாள். தன் தோழிக்கு ஒரு ஆரஞ்சுப் பழத்தினைக் கொடுத்தாள். மீதியிருந்த பழங்களை 3 பங்காகப் பிரித்து, தன்னுடைய பங்குப் பழங்களை எடுத்து தனது அறையினுள் வைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் தோழியுடன் வந்த எழிலரசியும் தன் தோழியிடம் ஒரு பழம் கொடுத்துவிட்டு, மீதியிருந்த பழங்களை 3 பங்காகப் பிரித்து, தனக்குரியதை எடுத்து வைத்தாள்.
கடைசியாகத் தோழியுடன் வந்த தமிழரசியும் அவ்வாறே செய்தாள். சகோதரிகள் மூவரும் படிப்பதற்காக அவரவர் அறையினுள் சென்றுவிட்டனர்.
வெளியில் சென்றிருந்த பெற்றோர் வந்ததும் மீதியிருந்த பழங்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு 3 பங்காக வைத்துக் கொடுத்தனர். அப்போது சகோதரிகள், எங்கள் பங்கினை நாங்களே எடுத்துக் கொண்டோம். எனவே, நீங்கள் இந்தப் பழங்களைச் சாப்பிடுங்கள் என்று பெற்றோரிடம் கூறிவிட்டனர்.
சகோதரிகளின் பெற்றோர் வாங்கி வந்த ஆரஞ்சுப் பழங்கள் மொத்தம் எத்தனை? சகோதரிகள் ஒவ்வொருவரும் எடுத்த பழங்கள் எத்தனை? பெற்றோர் பங்கிட்டபோது சகோதரிகளுக்கு எத்தனை பழங்கள் கொடுத்தனர்?
கண்டுபிடியுங்கள்.
விடை: இன்னொரு பக்கம்