உலகு சூழ் ஆழி – 8
இந்தியப் பெருங்கடல் – 1
உலகத்துப் பெருங்கடல்களில் மூன்றாவது பெரிய கடல் இது.
மேற்கே ஆப்பிரிக்கா, கிழக்கே ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, வடக்கே ஆசியா என்ற நிலப்பகுதிகளால் சூழப்பட்டது.
தெற்கே அண்டார்டிகா பெருங்கடலோடு கலக்கிறது. இப்பெருங்கடலுக்கு வடக்கே இயற்கையான வெளிச்செல்லும் வழியில்லை.
சூயஸ் கால்வாய், செங்கடலின் வடக்கு முனையில் இப்பெருங்கடலை மத்திய தரைக்கடலோடு இணைக்கிறது. இந்தியப் பெருங்கடல் பற்றி சில செய்திகள்:-
பரப்பு : 7,34,26,000 ச.கி.மீ.
சராசரி ஆழம் : 3,890 மீட்டர் (12,762 அடி)
மிகப்பெரிய ஆழம் : 7,450 மீட்டர் (24,441 அடி) அது ஜாவா – – பள்ளம்.
தீவுகளின் எண்ணிக்கை : 5,000
மிகப்பெரிய தீவு : போர்னியோ
மிகச்சிறிய நாடு : சிங்கப்பூர்
மக்கள் தொகை : 10 இலட்சம்
இயற்கைக் கூறுகள் :
பருவக் காற்றுகளுக்கு ஏற்ற வகையில் இப்பெருங்கடலில் நீரோட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இப்பெருங்கடலில், பவளத்திட்டுகள் பல உள்ளன. அங்குள்ள அழகான கடற்கரைகளும், வெப்பமான வானிலையும் சுற்றுலா வருவோரைக் கவர்ந்து இழுக்கின்றன.
வடகிழக்கிலிருந்தும், தென்மேற்கிலிருந்தும் பருவக் காற்றுகள் வீசி கடற்கரைப் பகுதிகளில் கனமழையைப் பெய்விக்கின்றன. சில சமயங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும்.
மலாக்கா நீர் இணைப்பு :
இந்நீர் இணைப்பு சுமத்ராவுக்கும், மலாய் தீபகற்பத்திற்கும் இடையே உள்ளது. இது ஒரு முக்கியமான வாணிப வழி. இந்தியப் பெருங்கடலின் கிழக்கு முனையில் பசிபிக் பெருங்கடலோடு இணைக்கும் நீர் இணைப்பு ஆகும். மலேசியாவில் உள்ள மலாக்காவும் (Melaka) சிங்கப்பூரும் முக்கியமான துறைமுகங்களாகும்.
உப்பு:
இக்கடலில் உப்பு அதிகமாக உள்ளது. மலைகளில் உற்பத்தியாகும் நதிகள் பாறைகளிலுள்ள பல்வேறு உப்புகளைக் கரைத்து கடலில் சேர்க்கின்றன.
கடற்கரை ஓரங்களில், கடல் நீரைத் தேக்கி, சூரிய வெப்பத்தில் கடல்நீரை வற்றச் செய்து, அதிலிருந்து பெறப்படும் உப்பை விற்று வாணிபம் செய்யப்படுகிறது.