உடல் உறுப்புகளை அறிதல்
உடலினையே அறிந்திடுவோம்
உடல் உறுப்புகளைத் தெரிந்திடுவோம்
அவை செய்யும் பணிகளையே
அழகாகக் கற்றிடுவோம்
கண்களால் பார்த்திடுவோம்
காதாலே கேட்டிடுவோம்
பார்த்ததையும் கேட்டதையும் பாடமாகப் படித்திடுவோம்
மூக்காலே நுகர்ந்திடுவோம்
முகமெல்லாம் மலர்ந்திடுவோம்
வாயாலே பேசிடுவோம்
வாய்மையை நாம் காத்திடுவோம்
கைகளாலே எழுதிடுவோம்
கால்களாலே நடந்திடுவோம்
கனிவு மிக்க அன்னையை நாம்
கைகளாலே தொழுதிடுவோம்
விரல்களாலே எண்ணிடுவோம்
விடை தனையே கூறிடுவோம்
வீரநடை போட்டு நாமும்
விருப்பமாக பள்ளி செல்லுவோம்
– ப.வனிதா, அருப்புக்கோட்டை