எரிமலைகள் எவ்வாறு உருவாகின்றன்?
புவியின் உட்புறத்தின் நகர்வுகளால், புவி ஓட்டில் திடீரென ஏற்படும் ஒரு துளையை எரிமலை என்கிறோம். உருகிய நிலையிலுள்ள பொருள்கள் புவியின் கவசப் பகுதியிலிருந்து உந்தப்பட்டு வெளியேறி புவி ஓட்டில் கூம்பு வடிவில் ஒன்று சேர்ந்து எரிமலைத் தொடர்களையும், மலைகளையும் ஏற்படுத்துகின்ற இந்த வெப்பமான உருகிய பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பை அடையும்போது அதனை லாவா எனவும் அழைக்கின்றோம்
– க.கார்த்திகா, அருப்புக்கோட்டை
செம்மொழி
தடுக்கி விழுந்தால் அ… ஆ…
சிரிக்கும்போது இ…. ஈ….
சூடுபட்டால் உ… ஊ…
அதட்டும்போது எ… ஏ…
வியப்பின்போது அய்
வக்கனையின்போது ஒ… ஓ… ஔ…
விக்கலின்போது ஃ
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்றுமொழி பேசும்
தமிழரிடம் தவறாமல் சொல்
உன்மொழி செம்மொழியென்று
– அ.பி.வைசாலி பிரகாஷ், திருச்சி – 21