விடுகதைகள்
1. பட்டம் பறப்பதேன், படித்தவர் உயர்வதேன்? அது என்ன?
2. இரண்டு வீட்டுக்கு ஒரே விட்டம். அது என்ன?
3. சொறியனைக் கறி சமைக்க சோறெல்லாம் கசப்பு. அது என்ன?
4. இந்தக் குதிரைக்கு இருப்பதே இரண்டுகால். உண்ணாது உறங்காது ஊர்சவாரி போகாது. சொந்தக்கால் இழந்தாலும் சொகுசாக ஆடிடலாம். அது என்ன?
5. கவிபாடும் கட்டழகி. காடு சுற்றும் கருப்பழகி. அது என்ன?
6. இராட்டையின்றி நூல் நூற்று இராப்பகலாய் காத்திருந்து வீட்டை அடைந்தோரை விருந்தாக்கி உண்டிடுவான். அது என்ன?
7. இரத்தத்தில் வளர்வது, இரத்தம் இல்லாதது. அது என்ன?
8. எரிப்பவன். ஆனால் எரியாதவன். அவன் யார்?
9. காட்டில் இருக்கும் கண்ணம்மாள். வீட்டில் வந்து விளையாடுவாள். அவள் யார்?
10. காய் காய்க்கும். பூ பூக்கும். இலை இல்லை. அது என்ன?
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்…