பிஞ்சு சொன்ன கதை
தெய்வம் கைவிட்டது
பூங்குடி என்ற அழகிய கிராமத்தின் நடுவே ஒரு கோவில் இருந்தது. கோவிலின் அருகே ஆலமரம் இருந்தது. ஆலமரம் அடியில் சாமியார் ஒருவர் இருந்தார். ஊர் மக்கள் அனைவரும் சாமியாரிடம் எந்த ஒரு செயலாக இருந்தாலும் கேட்டுத்தான் செய்வார்கள்.
ஒருநாள் ராமுவும், அவனது தாயாரும் சாமி யாரைப் பார்க்க வந்தனர். சாமியார் உங்களுக்கு என்ன குறை?- என்று கேட்டார். ராமுவின் தாயார், இவன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான். மக்குப் பையனாக இருக்கிறான். இன்னும் மூன்று மாதத்தில் பொதுத்தேர்வு வர இருக்கிறது. ராமு தேர்வில் தேர்ச்சி பெறுவானா? இல்லை தேர்ச்சி பெறமாட்டானா என்று கூறுங்கள் அய்யா! எனக் கேட்டார்.
சாமியாரோ ஒருசில மந்திரங்களை உச்சரித்துவிட்டு, முடிவாக இவன் தேர்ச்சிய டைய மாட்டான் என்று கூறிவிட்டார். ராமுவும், தாயாரும் அழுதனர். பின்னர், சாமியார்தான் கைவிட்டுவிட்டார், அந்தத் தெய்வத்திடமே சென்று முறையிடலாம் என்று கூறிக்கொண்டே கோவிலுக்குள் சென்றனர். அரளிப் பூவையும், ரோஜாப் பூவையும் தனித்தனிப் பொட்டலங்களா கக் கட்டிப் போட்டார் தாயார். அரளிப்பூ வந்தால் ராமு தேர்ச்சியடையமாட்டான், ரோஜாப்பூ வந்தால் தேர்ச்சியடைவான் என்று சொல்லி விட்டு வேண்டி எடுத்தபோது அரளிப்பூவே வந்தது. ராமுவும் தாயாரும் அழுது கதறினார்கள்.
இந்த அனைத்து நிகழ்வுகளையும், ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். மாணவன் ராமுவையும், அம்மாவையும் அருகே அழைத்து, இவன் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் நான் கூறுவதைக் கேட்க வேண்டும் எனக்கூறி ராமுவின் காதில் மந்திரம் ஒன்றைக் கூறி கையி லே மந்திரப் புத்தகம் ஒன்றையும் கொடுத்தார்.
மூன்று மாதங்கள் உருண்டோடின. பொதுத்தேர்வும் வந்தது. முடிவுகளும் வெளியாயின. ராமு பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தான்.
ஊர் மக்க ளும், ராமுவின் அம்மாவும், ஆச்சரியப்பட்டனர். எவ்வாறு தேர்ச்சி பெற்றாய்? எனக் கேட்டனர். ராமு, ஆசிரியர் எனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். அந்த மந்திரமாவது,
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் என்பதாகும்.
மந்திரப் புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். அது தான் திருக்குறள் புத்தகம். தெய்வத்தால் முடி யாத செயலைக்கூட, ஒருவரது முயற்சியால் சாதிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண் டேன். அதன்படி நடந்ததால்தான் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்தேன் என கூறினான். இதனைக் கேட்ட ஊராரும், அவனது தாயாரும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
(திருச்சி, பெரியார் நூற்றாண்டு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நமது ஆசிரியரின் 79ஆம் பிறந்த நாள் விழாவில், கதை சொல்லும் போட்டியின்போது இரண்டாம் வகுப்புப் படிக்கும் அ.அக்ஷயா கூறியது.)